ஐடி நிறுவனங்களுக்கு வருவாய் குறைந்து மந்த நிலை ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படும் நிலையில் டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை அறிவித்துள்ளன. ஆனால் இதற்கு மாறாக இன்போசிஸ் நிறுவனம் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் ஃபிரஷர்களை வேலைக்கு தேர்வு செய்யும் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது.
டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் சூழலில் இன்போசிஸ் நிறுவனம் புதிதாக ஊழியர்களை சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்திருக்கிறது. இன்போசிஸ் நிறுவனம் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் ஃபிரஷர்களை பணியில் அமர்த்த தங்களுடைய மூத்த ஊழியர்களை கொண்டு ஒரு குழுவை உருவாக்கி இருக்கிறது.

மூத்த ஊழியர்கள் கொண்ட குழு பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு சென்று கேம்பஸ் இண்டர்வியூ நடத்தி ஃபிரஷர்களை தேர்வு செய்ய இருக்கிறது. முதன்முறையாக இந்த கேம்பஸ் இன்டர்வியூ தேர்வுக்காக இன்போசிஸ் நிறுவனம் மூத்த நிலை ஊழியர்களை கொண்ட ஒரு குழுவினை அமைத்திருக்கிறது. இந்த குழுவினர் நாடு முழுவதும் இருக்கும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு சென்று ஃபிரஷர்களை வேலைக்கு தேர்வு செய்யும் பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்கள்.
ப்ரோக்ராமிங் தொடர்பான அடிப்படை புரிதல்கள் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஃபிரஷர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் டிஜிட்டல் ஸ்பெஷலிஸ்ட் இன்ஜினியர் என்ற பதவிகளுக்கு தான் இந்த கேம்பஸ் இண்டர்வியூ மூலம் ஃபிரஷர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் இருக்கும் கல்லூரிகளில் இவர்கள் கேம்பஸ் இண்டர்வியூ நடத்தி அங்கிருக்கும் மாணவர்களிடம் தனித்தனியாக நேர்காணல்களை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இன்போசிஸ் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஃபிரஷர்களை பணிக்கு அமர்த்துவதை குறைத்து இருந்த நிலையில் இந்த ஆண்டு அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது.
2023 ஆம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனம் 50,000 ஃபிரஷர்களை பணிக்கு அமர்த்தி இருந்தது. 2024 ஆம் நிதியாண்டில் அது 11,900 என பெரும் சரிவை கண்டது இதனை அடுத்து 2025 ஆம் ஆண்டில் அது 15,000 என அதிகரித்தது. இந்த நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனம் 15,000 முதல் 20,000 ஃபிரஷர்களை வேலையில் சேர்க்க முடிவு செய்திருக்கிறது.
இவர்கள் கேம்பஸ் இண்டர்வியூ மூலமாகவும் ஆஃப் கேம்பஸ் முறையிலும் வேலையில் அமர்த்த இருக்கின்றன. இன்போசிஸ் தவிர விப்ரோ உள்ளிட்ட 4 முன்னணி ஐடி நிறுவனங்கள் இந்த ஆண்டு 70,000 பட்டதாரிகளை பணிக்கு அமர்த்த திட்டமிட்டு இருக்கின்றன . இதற்கிடையே இன்போசிஸ் நிறுவனம் கேம்பஸ் இண்டர்வியூ பணிகளை அக்டோபர் மாதமே தொடங்கிவிடும் என சொல்லப்படுகிறது.
எலக்ட்ரிக்கல் ,எலக்ட்ரானிக்ஸ், டெலிகாம் , கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சிவில் மற்றும் மெக்கானிக்கல் உள்ளிட்ட பிரிவுகளின் பயிலும் மாணவர்கள் அனைவருமே இந்த கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்களாம். இவர்களுக்கு ஆப்டிட்யூட் டெஸ்ட், குழு விவாதம் , டெக்னிக்கல் தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு நேர்காணல் நடத்தப்படும். கேம்பஸ் மூலம் தேர்வாகும் ஃபிரஷர்களுக்கு மைசூரு வளாகத்தில் பயிற்சி வழங்கப்படும் என இன்போசிஸ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications