சென்னை: ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பர்னிச்சர் மற்றும் ஹோம் பர்னிஷிங் நிறுவனமான Ikea தனது ஐடி கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகப் பல முன்னணி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தற்போது மிகப்பெரிய ஆர்டரை இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ்-யிடம் கொடுத்துள்ளது.
புதிய ஆர்டர்களை பெறுவதில் பெரும் போராட்டத்தைச் சந்தித்து வந்த இன்போசிஸ் நிறுவனம் தற்போது ஸ்வீடன் நாட்டின் ஐகியா நிறுவனத்தின் ரூ.850 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. இதன்மூலம், HCL, Capgemini, DXC போன்ற நிறுவனங்கள், இன்னும் சில ஐரோப்பிய நிறுவனத்தின் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.

ஐந்து ஆண்டுகள் காலம் கொண்ட இந்த ஒப்பந்தத்தில் , Infosys நிறுவனம், ஐகியா நிறுவனத்தின் 170,000 ஊழியர்களுக்கான சர்வீஸ் டெஸ்க் மற்றும் 260,000 கருவிகள், ஐடி சேவை மேலாண்மை, ServiceNow அடிப்படையாகக் கொண்ட நிறுவன சேவை மேலாண்மை (Enterprise Service Management) ஆகிய சேவைகளை வழங்க உள்ளது.
சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, போலந்து, ஸ்வீடன், அமெரிக்கா உள்ளிட்ட 7 நாடுகளில் உள்ள Ikea நிறுவனத்தின் சுமார் 350 ஊழியர்கள் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இன்போசிஸ் நிறுவனத்திற்கு மாற்றப்பட உள்ளனர்.
ஐகியா நிறுவனத்தின் தாய் நிறுவனமான Ingka Group நிறுவனத்தின் தலைமை டிஜிட்டல் அதிகாரி Parag Parekh கூறுகையில், "எங்கள் தற்போதைய செயல்பாடுகளைக் கவனமாகப் பரிசீலனை செய்து மதிப்பீடு செய்த பின்னர், இன்போசிஸை Ingka Group தேர்வு செய்துள்ளது. Infosys நிறுவனத்துடன் கூட்டணி வாயிலாக, எங்கள் அடிப்படை வணிக செயல்பாடுகளை மேம்படுத்துவோம் மற்றும் செயல்பாடுகளை கூடுதலாக மேம்படுத்துவோம்" என்றார்.
இன்போசிஸ் நிறுவனம் வடக்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் தொடர்ந்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. கடந்த ஆண்டு டென்மார்க் நாட்டின் டான்ஸ்கே வங்கி நிறுவனத்துடன் 454 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை Infosys செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இதன் ஒரு பகுதியாக, டான்ஸ்கே வங்கியின் இந்தியாவில் உள்ள 1,400 ஐடி ஊழியர்களை Infosys நிறுவனம் கையகப்படுத்த உள்ளது.
More From GoodReturns

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications