இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ், பிரிட்டன், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளை தலைமையிடமாக கொண்டு இயங்கும் லிபெர்டி குளோபல் நிறுவனத்திடம் இருந்து சுமார் 1.5 பில்லியன் யூரோ மதிப்பிலான திட்டத்தை கைப்பற்றியுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரம் மீது இருந்து ரெசிஷன் அச்சம் குறைந்தது முதல் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் அதிகப்படியான திட்டங்களை குறிப்பாக பெரும் மதிப்பு கொண்ட திட்டங்களை அடுத்தடுத்து கைப்பற்ற துவங்கியுள்ளது. கடந்த வாரம் ஹெச்சிஎல் நிறுவனம் சுமார் 2.2 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லிபெர்டி குளோபல் நிறுவனத்தின் எண்டர்டெயின்மென்ட் மற்றும் கனெக்ட்டிவிடி தளத்தை மேம்படுத்தவும், விரிவாக்கம் செய்யவும் பணிகளை செய்ய உள்ளது. இதுகுறித்து இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக் கூறுகையில் லிபெர்டி குளோபல் நிறுவனத்தின் சேவைகளை Infosys Topaz மற்றும் Infosys Cobalt ஆகிய இரு முக்கிய சேவை தளத்தை கொண்டு மேம்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதில் Infosys Cobalt என்பது இன்போசிஸ் நிர்வாகம் உருவாக்கிய கிளவுட் சேவைக்கான டிஜிட்டல் பவுண்டேஷனாகும். இதில் Infosys Topaz என்பது செயற்கை நுண்ணறிவு சேவைக்காக பிரத்தியேகமாக இன்போசிஸ் உருவாக்கிய தளம். இவ்விரு புதிய மற்றும் நவீன தளத்தை ஒன்றிணைத்து சேவை அளிக்க உள்ளது Infosys.
இன்போசிஸ் தற்போது லிபெர்டி குளோபல் நிறுவனத்திடம் இருந்து பெற்ற 1.5 பில்லியன் யூரோ மதிப்பிலான திட்டம் 5 வருடத்திற்கானது, இது 8 வருடம் வரையில் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருக்கும் வேளையில், இந்த ஒப்பந்த மதிப்பு 2.3 பில்லியன் டாலராக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இது மட்டும் அல்லாமல் இன்போசிஸ் உடனான ஒப்பந்தத்தால் லிபெர்டி குளோபல் சேவை மேம்படும், இதேபோல் வருடத்திற்கு 100 மில்லியன் யூரோ சேமிக்கும் வாய்ப்பை பெற உள்ளது.
இந்த ஒப்பந்தம் வாயிலாக லிபெர்டி குளோபல் நிறுவனத்தில் பணியாற்றும் உயர் நிர்வாக அதிகாரிகள், டெக்னாலஜி அணிகள், டெக்னாலஜி டெலிவரி சேவை ஊழியர்கள், ஆப்ரேஷன்ஸ், நெட்வொர்க், செக்யூரிட்டி ஊழியர்கள் என மொத்தம் 400 ஊழியர்கள் இன்போசிஸ் நிறுவனத்தில் இணைய உள்ளனர். இவர்கள் அனைவரும் லிபெர்டி குளோபல் நிறுவன பணியில் பணியாற்ற உள்ளனர்.


Click it and Unblock the Notifications