இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ், கொரோனா காலத்தில் இருந்து நாட்டின் 2ஆம் நிலை நகரங்களில் அலுவலகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் கோயம்புத்தூரில் தனது அலுவலகத்தை துவங்கி 2 வருடத்தில் அடுத்தடுத்து விரிவுபடுத்தியுள்ளது. இன்போசிஸ் நிறுவனம் சமீபத்தில் SVB டெக் பார்க்கின் 2வது கட்டத்தில் மூன்று கூடுதல் தளங்களை குத்தகைக்கு எடுத்துள்ளது, இதன் மூலம் SVB டெக் பார்க்-ல் மொத்தம் 9 தளங்களில் அலுவலகம் அமைந்துள்ளது.
இந்த விரிவாக்கம், இன்ஃபோசிஸின் 2-வது தர நகரங்களில் அலுவலகத்தை விரிவாக்கம் செய்வது மூலம் தனது வர்த்தகத்திற்கு மிகவும் லாபகரமான சூழல் உருவாக்கி வருவதை காட்டுகிறது. இதேபோல் கோயம்பூத்தூர் போன்ற நகரங்களில் திறன்வாய்ந்த ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் காரணத்தால் தொடர்ந்து விரிவாக்கம் செய்யும் பணிகளை அதிகரித்துள்ளது.

SVB டெக் பார்க் என்பது பன்னாரி அம்மன் குழுமத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இது கோவையின் வேகமாக வளரும் புறநகர் பகுதியான கலப்பட்டியில் 7 ஏக்கர் நிலப்பரப்பில் 1 மில்லியன் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட்ட நவீன ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப பூங்காவாகும். இந்த திட்டம் ஐடி மற்றும் BPO பிரிவுகளின் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்கிறது. இந்த இடம் பல நிறுவனங்களுக்கு விரும்பத்தக்க வணிக இடமாக தொழில்நுட்ப பூங்காவின் இணைப்பை மேம்படுத்துகிறது.
இதன் மூலம் பெங்களூர், ஹைதரபாத் இன்போசிஸ் ஊழியர்கள் தங்களது சொந்த ஊருக்கு அருகில் வரும் முயற்சியாக கோயம்புத்தூர்-க்கு இடம் மாறலாம், இதேபோல் கோயம்புத்தூரில் இருக்கும் மாணவர்களுக்கும் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாகும்.

தமிழ்நாட்டில் ஜவுளி மற்றும் பருத்தி ஆலைகளுக்கு பெயர் பெற்ற கோவை, கடந்த பத்தாண்டுகளில் தன்னை ஒரு முக்கியமான ஐடி மையமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் ஐடி நிறுவனங்கள் கோவைக்கு வருவதற்கு தயங்கின. ஐடி துறை தொடர்பான திறமையான தொழிலாளர்கள் பற்றாக்குறை மற்றும் ஐடி அலுவலகங்களுக்கான போதுமான கட்டமைப்புகள் இல்லாதது போன்ற காரணங்கள் இதற்கு முக்கிய காரணங்களாக இருந்தன.
ஆனால் தற்போது, கோவை பல்வேறு ஐடி நிறுவனங்களின் தாயகமாக மாறியுள்ளது. நாஸ்காம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தொடங்க சிறந்த நகரங்களில் கோவை 13வது இடத்தைப் பிடித்துள்ளது. 2020-ல் 271 ஸ்டார்ட்அப்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அது 1350 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, இங்கு தொடங்கப்படும் பெரும்பாலான ஸ்டார்ட்அப்கள் ஐடி சேவை சார்ந்தவை.
கோவையில் உள்ள கல்வி நிறுவனங்கள் ஐடி துறை சார்ந்த படிப்புகளை வழங்குவதால், திறமையான தொழிலாளர்களை உள்ளூர்ரிலேயே கிடைப்பது எளிதாகியுள்ளது. இதனால் பல நிறுவனங்கள் கோவையை தங்கள் செயல்பாட்டு மையமாக தேர்வு செய்கின்றன. TeamLease Degree Apprenticeship நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரமேஷ் அல்லூரி ரெட்டி கூறுவது போல, கோவை போன்ற இரண்டாம் தர நகரங்களில் திறமையான பணியாளர்களை எளிதாகக் கண்டறிய முடியும். தமிழ்நாட்டின் மொத்த மென்பொருள் ஏற்றுமதியில் 25% கோவை போன்ற சென்னை தவிர்த்த பிற நகரங்களில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையின் இந்த மாற்றம், இந்தியாவின் பிற நகரங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. பெரிய நகரங்களில் நிலவும் அதிக போட்டி மற்றும் உயர்ந்த வாழ்க்கைச் செலவு ஆகியவற்றிலிருந்து விலகி, இரண்டாம் தர நகரங்கள் தங்கள் திறமைகளைப் பயன்படுத்தி வளர்ச்சியடையலாம் என்பதை கோவை நிரூபித்துள்ளது.
More From GoodReturns

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications