உலகளாவிய நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்ப சேவைகளுக்கு மூன்றாம் தரப்பு நிறுவனங்களை நம்பாமல், சொந்தமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தியாவில் தங்கள் உலகளாவிய திறன் மையங்களை (GCC) அமைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. சொல்லப்போனால் உலகம் முழுவதும் பன்னாட்டு நிறுவனங்கள் GCC-களை அமைத்து வருகிறது, இதில் இந்தியாவில் அதிகம் என்றால் மிகையில்லை.
இந்தியாவில் GCC நிறுவனங்கள் அதிகரித்து வரும் போதும், இது இந்திய ஐடி சேவை நிறுவனங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என முன்பு பேசப்பட்டாலும், தற்போது இந்த பிரச்சனையை இந்திய ஐடி நிறுவனங்கள் புதிய வர்த்தக வாய்ப்பாக மாற்றியுள்ளது, பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

இந்திய IT நிறுவனங்கள் GCCகளை போட்டியாளராகப் பார்ப்பதற்குப் பதிலாக, இவற்றுடன் இணைந்து செயல்படு முடிவு செய்து, இந்தியாவுக்கு வரும் நிறுவனங்கள் அலுவலகம் அமைக்கவும், ஊழியர்களை நியமித்து, அலுவலகத்தை இயக்கி சில காலம் வரை நிர்வாகம் செய்து ஒப்படைக்கும் (build operate transfer (BOT) model) வர்த்தக மாடலை செயல்படுத்தி வருகிறது.
பொதுவாக இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிகப்படியான வருவாய் அமெரிக்கா, ஐரோப்பியச் சந்தைகளிலிருந்து தான் பெறும், இந்தநிலையில் இந்தியாவுக்கு வரும் GCC அலுவலகங்களுக்குச் சேவை அளிப்பதன் மூலம் உள்நாட்டில் வருவாய் அதிகரிக்கும் வழியை இந்திய ஐடி சேவை நிறுவனங்களுக்கு உருவாகியுள்ளது.
தற்போது இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக் மற்றும் விப்ரோ போன்ற முன்னணி நிறுவனங்கள் GCC-களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குவது மூலம் பெரிய அளவில் கல்லாகட்டி வருகிறது.
GCCகளின் வருகை இந்திய ஐடி சேவை துறைக்கு ஒரு முக்கிய வருவாய் ஈட்டும் பிரிவாக மாறும் என்று இத்துறை வல்லுநர்கள் நம்புகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற முக்கிய சந்தைகளிலிருந்து தேவை குறைந்து வருவதால், GCCகளுக்கான சேவை புதிய நம்பிக்கையாக மாறியுள்ளது.
பெரிய IT சேவை நிறுவனங்களின் வருவாயில் GCCகளின் பங்களிப்பு அதிகரித்து வருவதையும், ஆண்டுக்கு 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக ஈட்டக்கூடும் என்றும் தொழிற்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த எவரெஸ்ட் குரூப் என்ற ஆராய்ச்சி நிறுவனம் செய்த ஆய்வில் IT மற்றும் BPO நிறுவனங்கள் GCCகள் மற்றும் அதற்கு தொடர்புடைய சேவைகள் மூலம் சுமார் 20 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டுவதாக தெரிவித்துள்ளது. இதில் இந்திய ஐடி நிறுவனங்கள் பெரும் பங்கைப் பிடித்துள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 1- 2 ஆண்டுகளில் புதிதாக நிறுவப்பட்ட GCCகளில் பாதி, இந்திய ஐடி மற்றும் BPO நிறுவனங்களின் உதவியை நாடின என்று எவரெஸ்ட் குரூப்பின் தரவு வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் ஐடி சேவை நிறுவனங்கள் GCC-களுக்கு பில்ட்-ஆப்ரேட்-டிரான்ஸ்ஃபர் (BOT) மாடிலில் தான் அதிகப்படியான சேவை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியா ஐடி நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் பிரான்ஸ் நாட்டின் முன்னணி ஐடி கன்சல்டிங் சேவை நிறுவனமான கேப்ஜெமினி, BOT, GCC accelerator, GCC-as-a-service மற்றும் கூட்டு முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பிஸ்னஸ் மாடல்களில் உலகம் முழுவதும் ஜிசிசி அலுவலகங்களை அமைக்க உதவி செய்கிறது.


Click it and Unblock the Notifications