ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் மற்றும் ஹெச்1பி விசா கட்டுப்பாடுகளுக்கு பின்பு இந்தியாவின் முன்னணி ஐடி சேவை மற்றும் டெக் நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்கள் எண்ணிக்கையை வேகமாக குறைக்க திட்டமிட்டு இருக்கிறது. ஆனால் இன்போசிஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் 6 மாத காலத்தில் மட்டும் சுமார் 12000 பிரஷ்ஷர் ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளது.
சமீபத்தில் டிசிஎஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் ஜூலை மாதம் 12,260 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும், செப்டம்பர் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 19,755 ஊழியர்கள் குறைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 6 முதல் 2 வருடம் வரையிலான severance pay கொடுக்கப்பட்ட நிலையில் இதற்கான ஒரு முறை செலவுகள் மட்டும் ரூ.1,135 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் தனது காலாண்டு முடிவுகளில் தெரிவித்திருந்தது.
ஆனால் இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ நிறுவனங்களின் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகாரித்துள்ளது. இன்று காலாண்டு முடிவுகளை வெளியிட்ட இன்போசிஸ் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் மட்டும் சுமார் 12000 பிரஷ்ஷர் ஊழியர்களை பணியில் சேர்த்துள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 20000 பிரஷ்ஷர் ஊழியர்களை பணியில் சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக இன்போசிஸ் தலைமை நிதியியல் அதிகாரியான ஜெயேஷ் சங்கராஜ்கா தெரிவித்துள்ளார்.
மேலும் இன்போசிஸ் தொடர்ந்து 5வது காலாண்டாக ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது, செப்டம்பர் காலாண்ட் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை முந்தைய காலாண்டை காட்டிலும் 8203 பேர் அதிகரித்துள்ளனர். 2026ஆம் நிதியாண்டின் அரையாண்டு முடிவில் சுமார் 8413 ஊழியர்கள் அதிகரித்துள்ளது மூலம் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 3,31,991 ஆக உயர்ந்துள்ளது.
இக்காலக்கட்டத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 14.4 சதவீதத்தில் இருந்து 14.3 சதவீதமாக குறைந்துள்ளது. இதே 6 மாத காலக்கட்டத்தில் ஹெச்சிஎல் நிறுவனத்தில் 7180 பேர் அதிகரித்துள்ளனர்.
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் ஐடி நிறுவன சிஇஓ-வான சிலில் பாரிக் தலைமையில் இன்போசிஸ் 2026 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிகர லாபம்13 சதவீதம் உயர்ந்து 7,364 கோடி ரூபாயாக பாதிவாகியுள்ளது. அதேபோல், ஆப்ரேட்டிங் வருவாய் 9 சதவீதம் அதிகரித்து 44,490 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications