பெங்களூரு: இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் புதிதாக வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் முறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
முன்பெல்லாம் கேம்பஸ் இண்டர்வியூக்கள் மூலம் பெரும்பாலான ஃபிரஷ்ஷர்களை இன்போசிஸ் நிறுவனம் பணிக்கு தேர்வு செய்யும். ஆனால் தற்போது அதனை குறைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்டுள்ள ஊழியர்களில் 50 சதவீதம் பேர் கேம்பஸ் மூலம் இல்லாமல், வெளியில் இருந்து அதாவது ஆஃப் கேம்பஸ் முறையில் தேர்வு செய்யப்பட்டு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்..
2024ஆம் ஆண்டில் கடைசி மூன்று காலாண்டுகளில் இன்போசிஸ் நிறுவனம் கல்லூரிகளில் இருந்து புதிதாக யாரையும் வேலைக்கு தேர்வுசெய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் இன்போசிஸ் நிறுவனம் 51,000 பேரை புதிதாக அதாவது ஃபிரஷ்ஷர்களாக பணிக்கு சேர்த்தது.
இன்போசிஸ் நிறுவனத்தின் நான்காவது காலாண்டு வருவாய் தொடர்பான தகவல்களை நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஜேயேஷ் வெளியிட்டுள்ளார். அதில், தங்கள் நிறுவனத்தில் புதிதாக ஃபிரஷ்ஷர்களை பணிக்கு அமர்த்தும் முறையில் பெரிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனத்திற்கு தேவையான ஃபிரஷ்ஷர்களை முழுவதுமாக கல்லூரிகளில் கேம்பஸ் பிளேஸ்மெண்ட்கள் மூலம் தேர்வு செய்வது என்பது மாற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
புதிதாக பணிக்கு எடுப்பவர்களில் 50% கல்லூரிகளில் இருந்தும் 50% வேறு வழிகளிலும் என தேர்வு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டில் கல்லூரிகளில் இருந்து எத்தனை சதவீதம் பேரை பணிக்கு தேர்வு செய்வது என்பதை இதுவரை முடிவு செய்யவில்லை என்றும் ஜேயேஷ் கூறியுள்ளார்.
கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையில் 25,994 பேர் குறைந்துள்ளனர். அதாவது கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் இன்போசிஸ் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 3,43,234 ஆக இருந்து, தற்போது 3,17,240 என குறைந்துள்ளது.
கடந்த மார்ச் உடன் முடிவடைந்த காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் என்பது 7,969 கோடி ரூபாயாக உள்ளது. இது சந்தை கணிப்புகளை விட அதிகமாக உள்ளது. ஓராண்டு அளவில் நிறுவனத்தின் லாபம் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் லாபம் 6,128 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதனிடையே நடப்பாண்டில் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி கணிப்பானது 4 - 7 சதவீதத்தில் இருந்து 1 -3 சதவீதம் என குறைக்கப்பட்டுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications