அக்சென்சர், காக்னிசென்ட் நிறுவனங்கள் வர்த்தக பாதிப்பாலும், மந்தமான பொருளாதார சூழ்நிலை மத்தியில் ஐடி ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த நாளில் இருந்து இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் என்ன முடிவு எடுக்கும் என்பது குறித்து அனைத்து ஐடி ஊழியர்களும் அச்சம் கலந்த பயத்தில் உள்ளனர் என்றால் மிகையில்லை.
இதற்கு மத்தியில் பணிநீக்கம் குறித்து எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடாமல் எப்படியெல்லாம் செலவுகளை குறைத்து ஊழியர்களின் செயல்திறனை மேம்படுத்த முடியும் என்பதை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது இந்திய ஐடி சேவை நிறுவனங்கள்.

சமீபத்தில் பெரும்பாலான ஐடி ஊழியர்கள் காலியான பணியிடத்திற்கு வெளியில் இருந்து ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை நிறுத்தியுள்ளது, பென்ச்-ல் இருக்கும் ஊழியர்களுக்கு அதிவிரைவான பயற்சிகளை கொடுத்து பணியில் சேர்த்து வருகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் இந்தியாவில் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஒருப்பக்கம் ஐடி ஊழியர்கள் இந்த வருடம் எவ்வளவு சம்பள உயர்வு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில், இன்போசிஸ்-ன் மூத்த மற்றும் முக்கியமான ஊழியர்களுக்கான பங்குகளை வழங்கியுள்ளது.
இன்போசிஸ் பங்குகள் 1,258.75 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் நேரத்தில் சுமார் 5.11 லட்சம் பங்குகளை இன்போசிஸ் நிர்வாகம் தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு வழங்கி அசத்தியுள்ளது. ஒவ்வொரு நிறுவனமும் தனது நிறுவன வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஊழியராக இருப்பவருக்கு ஒவ்வொரு வருடமும் அவர்களின் செயல்திறன் அடைப்படையில் பங்குகள் அளிக்கப்படும்.
இந்த பங்குகளை உடனே பணமாக்க முடியாது என்பதால் இந்த முக்கியமான ஊழியரை நீண்ட காலம் நிறுவனத்தில் தக்கவைத்துக்கொள்ள முடியும். கார்பரேட் நிறுவனங்களில் இதுப்போன்ற பங்குகளை மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இப்படியென்றால் அந்த ஊழியர் எவ்வளவு முக்கியம் என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

மே 14 ஆம் தேதி இன்போசிஸ் பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையின் படி, மே 12 ஆம் தேதி நிறுவனத்தில் தகுதியான ஊழியர்களுக்கு 5,11,862 பங்குகளை Restricted Stock Units ஆக வழங்கப்பட்டது என தெரிவித்தது. இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5.21 லட்சம் கோடி ரூபாயாகும்.
மேலும் இன்போசிஸ் ஊழியர்களின் செயல்திறனை அதிகரித்த 90 சதவீத ஊழியர்களை வாரத்தில் 3 நாட்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்ற விதிமுறையை கடந்த வாரம் நடைமுறைப்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் முதல் 90 சதவீத ஊழியர்கள் அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
இதேபோல் இன்போசிஸ் உட்பட அனைத்து முன்னணி ஐடி ஊழியர்களுக்கும் கடந்த வருடத்திற்கான சம்பள உயர்வு அளிக்கும் பணிகளை செய்ய உள்ளது. இதேபோல் மார்ச் காலாண்டுக்கான வேரியபிள் பே தொகை அளிக்கும் பணிகளை வேகப்படுத்தியுள்ளது, இவ்விரண்டுக்காக ஐடி ஊழியர்கள் தற்போது காத்துகிடக்கின்றனர்.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications