சம்பளத்தை கொடிக்கொடுக்க தயாராகும் இன்போசிஸ்.. ரெஸ்யூம் ரெடி பண்ணுங்க பாஸ்..!!

பெங்களூரு: இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் குறிப்பிட்ட பிரிவுகளில் திறன் வாய்ந்த ஊழியர்களை பணிக்கு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமாக இன்போசிஸ் செயல்பட்டு வருகிறது. இன்போசிஸ் நிறுவனம் 40க்கும் அதிகமான திறன்களில் நிபுணத்துவம் பெற்ற தொழில்நுட்ப நிபுணர்களை பணிக்கு தேர்வு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன்படி கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி, ஜாவா பைத்தான், டாட் நெட், ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் டெவலப்மென்ட் மற்றும் ஆட்டோமேஷன் டெஸ்டிங் உள்ளிட்ட பிரிவுகளில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளத்தை கொடிக்கொடுக்க தயாராகும் இன்போசிஸ்.. ரெஸ்யூம் ரெடி பண்ணுங்க பாஸ்..!!

கடந்த ஆண்டு இதே போல இன்போசிஸ் நிறுவனம் தொழில்முறை நிபுணர்களை வாக் இன் முறையில் நேர்காணல் நடத்தி பணிக்கு தேர்வு செய்தது. அப்போது பெங்களூரு, சென்னை , ஐதராபாத்தில் உள்ள இன்போசிஸ் அலுவலகத்தில் தொழில் நிபுணர்கள் நேரடியாக வந்து நேர்காணலில் கலந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டது. இது தொடர்பாக இன்டெர்னல் கம்யூனிகேஷன் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்போசிஸ் நிறுவனம் எந்த இடத்தில் நேர்காணலுக்கு வர அவர்கள் விரும்புகிறார்கள் என்பதை தேர்வு செய்யும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இன்போசிஸ் நிறுவனம் கொரோனா பெருந்தொற்று காலத்தில் காணொளி வாயிலாக பெங்களூரு அலுவலகத்தில் இருந்து நேர்காணல் நடத்தி தொழில் நிபுணர்களை வேலைக்கு எடுத்தது.

இன்போசிஸ் நிறுவனம் இந்த ஆண்டில் 20,000 ஃபிரஷர்களை பணிக்கு அமர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. இது தவிர அனுபவம் வாய்ந்த நபர்களையும் வேலைக்கு எடுக்க முன்வந்துள்ளது. தற்போதைக்கு இன்போசிஸ் நிறுவனத்தில் 3.23 லட்சம் பேர் பணியில் இருக்கின்றனர்.

இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வேலையை விட்டு சென்றவர்களின் காலி பணியிடங்களை நிரப்புவது, புதிய புராஜெக்ட்களுக்காக ஃபிரஷர்களை தேர்வு செய்வது என பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இது தவிர பொறியியல் படிப்பு முடித்த 600 மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான கடிதத்தை இன்போசிஸ் நிறுவனம் கடந்த மாதம் தான் வழங்கியது. இன்போசிஸ் நிறுவனம் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் தர்வாத் மாவட்டத்தில் 600 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தந்துள்ளது.

கடந்த 9 மாதங்களில் இன்போசிஸ் நிறுவனத்தில் நேர்காணலில் பங்கேற்றவர்களுக்கு இப்போது வாய்ப்பு வழங்க முடியாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் நுழைவு நிலை ஊழியர்கள் 300க்கும் அதிகமானவர்களை இன்போசிஸ் நிறுவனம் திடீரென பணிநீக்கம் செய்து சர்ச்சையில் சிக்கியது. ஃபிரஷர்களை பணிக்கு எடுத்து பயிற்சி வழங்கி அவர்களுக்கு சில தகுதி தேர்வுகளை நடத்தியது. தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெறாத நபர்களை பணிநீக்கம் செய்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+