பைசர் நிறுவனத்தின் 1.5 பில்லியன் டாலர் ஐடி வர்த்தகத்தை கைப்பற்றப்போகும் இன்போசிஸ்..!

கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் முன்னோடியாக இருந்த பைசர் நிறுவனத்தின் ஐடி சேவை வர்த்தகத்தைக் கைப்பற்ற இந்திய ஐடி நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் உலகின் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் கடுமையாகப் போட்டிப்போட்டு வரும் நிலையில், அனைத்து நிறுவனங்களையும் பின்னுக்குத் தள்ளி இன்போசிஸ் முதன்மையான இடத்தில் உள்ளது.

பைசர் நிறுவனத்தின் ஐடி சேவை வர்த்தக ஒப்பந்தத்தின் மதிப்பு 1.2 பில்லியன் டாலர் என்பதால் முன்னணி ஐடி நிறுவனங்கள் மத்தியில் போட்டி மிகவும் அதிகமாக இருந்தது.

பைசர் நிறுவனம்

பைசர் நிறுவனம்

பைசர் நிறுவனத்தின் ஐடி சேவை வர்த்தகத்தைக் கைப்பற்றுவதற்கான போட்டியில் இன்போசிஸ் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்நிறுவனப் பங்குகள் இன்று கணிசமான உயர்வில் உள்ளது. மேலும் இந்தப் பேச்சுவார்த்தையில் இன்போசிஸ் வெற்றிபெற்றால் தனது வர்த்தகத்தில் மிகப்பெரிய உச்சத்தை அடையும்.

இந்திய ஐடி நிறுவனங்கள்

இந்திய ஐடி நிறுவனங்கள்

கடந்த 9 மாதத்தில் இன்போசிஸ் நிறுவனம் அதிக மதிப்புடைய வர்த்தகத்தை அதிகளவில் பெற்றுள்ளது. குறிப்பாக வெளிநாட்டின் முன்னணி நிறுவனங்களின் ஐடி சேவை மற்றும் கட்டுமான வர்த்தகத்தைப் பெற்று சக இந்திய ஐடி நிறுவனங்களை விடவும் அதிகமான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.

குறிப்பாகத் தற்போது இன்போசிஸ் பேச்சுவார்த்தை பைசர் நிறுவன வர்த்தகத்தைக் கைப்பற்ற டிசிஎஸ்-ம் போட்டிப்போட்டு வருகிறது.

 

9 மாத வர்த்தகம்

9 மாத வர்த்தகம்

இன்போசிஸ் கடந்த ஒரு மாதத்தில் இன்போசிஸ் தனது லார்ஜ் டீல் பிரிவில் மொத்தம் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. இதன் படி தற்போது பேச்சுவார்த்தையில் இருக்கும் பைசர் நிறுவனத்தின் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தைப் பெற்றால் இதன் அளவீடு 13.5 பில்லியன் டாலராக உயரும்.

44 சதவீதம் அதிக வர்த்தகம்

44 சதவீதம் அதிக வர்த்தகம்

சமீபத்தில் இன்போசிஸ் டயாம்லர் நிறுவனத்திடம் இருந்து 3.2 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தையும், வேன்கார்டு நிறுவனத்திடம் இருந்து 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்பேசிஸ் லார்ஜ் டீல் பிரிவில் கடந்த வருடத்தை விடவும் சுமார் 44 சதவீதம் அதிக வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+