இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின்பு இந்திய பங்குச்சந்தையில் புதிய உயரத்தை எட்டியுள்ளது.
இன்போசிஸ் தனது காலாண்டு முடிவு ஈவுத்தொகை, பைபேக் திட்டம் அறிவித்ததன் எதிரொலியாக இன்போசிஸ் பங்குகள் இன்று தடாலடி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இன்போசிஸ் பங்கு வளர்ச்சி
இன்போசிஸ் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 5.09 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து 1491.50 ரூபாய் அளவீட்டை எட்டியுள்ளது, இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 6.26 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டை தொட்டு உள்ளது. இதன் மூலம் இன்போசிஸ் மீண்டும் டாப் 10 நிறுவனங்கள் பட்டியலில் சந்தை மதிப்பீட்டு அளவுகள் படி 4வது இடத்தை எட்டியுள்ளது.
டாப் 5 நிறுவனங்கள்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதல் இடத்திலும், டிசிஎஸ், ஹெச்டிஎப்சி வங்கி முதல் 3 இடத்தைப் பிடித்த நிலையில் 4வது இடத்தில் இருந்த ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தைப் பின்னுக்குத்தள்ளி இன்போசிஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
காலாண்டு முடிவுகள்
இன்போசிஸ் பங்குகள் காலாண்டு முடிவுகளுக்குப் பின்பு 5 சதவீதம் வரையில் உயர்ந்திருந்தாலும், 2022 ஆம் நிதியாண்டில் 21.37 சதவீத சரிவில் உள்ளது. இந்தப் பெரும் சரிவில் இருந்து இன்போசிஸ் சர்வதேச பொருளாதாரம் மந்தநிலையில் மீண்டு வர வாய்ப்புகள் மிகவும் குறைவு.
லாபம், வருவாய்
இன்போசிஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் 23.4 சதவீத வருடாந்திர உயர்வில் 36,538 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது. இதேபோல் லாப அளவில் 11 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்து சுமார் 6021 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது.
ஈவுத்தொகை, பைபேக் திட்டம்
முதலீட்டாளர்களைக் கவர இன்போசிஸ் தனது செப்டம்பர் காலாண்டு முடிவில் ஒரு பங்கிற்குச் சுமார் 16.50 ரூபாய் ஈவுத்தொகையை அளிக்க நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதோடு ஓப்பன் மார்கெட்டில் இருக்கும் இன்போசிஸ் பங்குகளை அதிகப்படியாக 1850 ரூபாய் விலையில் சுமார் 9300 கோடி ரூபாய்க்கு வாங்க முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications