கர்நாடகா மாநிலம் மைசூரில் இருக்கும் இன்போசிஸ் நிறுவன வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை அடுத்து ஊழியர்களுக்கு முக்கியமான அறிவிப்புகளை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரில் இன்போசிஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய அலுவலகம் இயங்கி வருகிறது. இன்போசிஸ் நிறுவனத்தில் இணையும் ஜூனியர் நிலையிலான ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது இந்த வளாகத்தில் தான்.

எனவே இங்கே ஊழியர்களின் எண்ணிக்கை எப்பொழுதுமே அதிகமாகவே இருக்கும். இந்த வளாகம் வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது. இங்கே டிசம்பர் 31ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் சிறுத்தை ஒன்று நடமாடியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனை அடுத்து நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை செய்து ஊழியர்கள் யாரும் வளாகத்திற்குள் வர வேண்டாம் என உத்தரவிட்டனர் .பின்னர் பெரும்பாலான ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்போசிஸ் வளாகத்தில் நுழைந்த சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சிறுத்தையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்போசிஸ் நிர்வாகம் ட்ரெய்னியாக சேர்ந்து இருப்பவர்களுக்கு புதிதாக ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளது. அதில் ஊழியர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட வழிகளில் மட்டுமே சென்று வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ட்ரெய்னி நிலையில் இருக்கும் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட பாதைகளை ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தில் குறிப்பிட்டு வரைபடத்தையும் வழங்கியுள்ளனர். இந்த வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாதைகளை மட்டுமே பயன்படுத்தி வேலை செய்யும் இடம் மற்றும் கேண்டின் உள்ளிட்டவருக்கு அவர்கள் சென்று வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியாக யாரும் நடந்து செல்லக்கூடாது என்றும் குறைந்தது 5 பேர் கொண்ட குழுவாக மட்டுமே செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரும் நடை பாதைகளில் இருக்கும் பெஞ்ச்களில் தனியாக அமர்ந்திருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவை இல்லாமல் யாரும் கட்டிடத்தை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் இன்போசிஸ் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
அதிக எண்ணிக்கையிலான ஆட்கள் ஒரே இடத்தில் கூடியிருப்பது அதிக சத்தத்தை எழுப்புவது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் இன்போசிஸ் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் கூண்டிற்குள் ஆடுகளை கட்டி வைத்து சிறுத்தை பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும், ஐந்து கூண்டுகள் மற்றும் 25 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். மொத்தம் 15 பேர் கொண்ட குழு சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. கிட்டத்தட்ட 8 நாட்களாக இந்த சிறுத்தை யார் கண்ணிலும் படாமல் ஆட்டம் காட்டி வருகிறது.
Story Written by: Devika
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications