2 ஆண்டுகளுக்கு பின் ஆஃபர் லெட்டர் கொடுத்த இன்போசிஸ்..!

பெங்களூரு: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் இரண்டு ஆண்டுகள் காத்திருப்புக்கு பின்னர் , சுமார் 1000 பொறியாளர்களுக்கு ஆஃபர் லெட்டர்களை அனுப்பி வைத்துள்ளது. இவர்கள் அனைவரும் 2022ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தால் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள்.

Nascent Information Technology Employees Senate (NITES) எனப்படும் ஐடி ஊழியர்களுக்கான அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனம் கேம்பஸ் பிளேஸ்மெண்ட் முறையில் ஃபிரஸ்ஸர்களை பணிக்கு சேர்ப்பதை குறைத்துள்ளது. இந்நிலையில் 2022ஆம் ஆண்டு இந்த நிறுவனம் சுமார் 2000 பொறியியல் பட்டதாரிகளை பணிக்கு சேர்த்துவிட்டு அவர்களுக்கு வேலை வழங்காமல் இருந்தது. இதனிடையே இவர்களில் 1000 பேருக்கு பணியில் சேர்வதற்கான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளுக்கு பின் ஆஃபர் லெட்டர் கொடுத்த இன்போசிஸ்..!

இது தொடர்பாக NITES வெளியிட்டுள்ள தகவலில் இன்போசிஸ் நிறுவனம் பொறியியல் பட்டதாரிகளுக்கு இரண்டு ஆண்டு கால காத்திருப்பதற்குப் பின்னர் ஆஃபர் லெட்டர்களை அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த வாரம் தான் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சகேல் பரேக் பிரஸ்ஸர்களுக்கு உரிய முறையில் ஆஃபர் லெட்டர்கள் வழங்கப்பட்டு அவர்கள் நிறுவனத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என தெரிவித்தார்.

இதன்படி 1000 பட்டதாரிகளுக்கும் இமெயில் மூலம் ஆஃபர் லெட்டர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அக்டோபர் 7ஆம் தேதியிலிருந்து அவர்கள் பணிக்கு சேர்ந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக சிஸ்டம் இன்ஜினியர் பணிகளுக்கான ஆஃபர் லெட்டர்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனம் இந்த பட்டதாரிகளை பணிக்கு தேர்வு செய்தது, 2024 ஆம் ஆண்டில் இரண்டு முறை பயிற்சி வகுப்புகளையும் நடத்தியது. இருந்தாலும் அவர்களுக்கான ஆஃபர் லெட்டர்கள் வழங்கப்படாமல் இருந்தது. முன்னதாக NITES சார்பாக மத்திய தொழில்துறை அமைச்சகத்திடம் இன்போசிஸ் நிறுவனத்திடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டது.

இன்போசிஸ் நிறுவனம் சுமார் 2000 பொறியியல் பட்டதாரிகளை சிஸ்டம் இன்ஜினியர் பணிக்கும், டிஜிட்டல் சிஸ்டம் இன்ஜினியர் பணிக்கும் ஆண்டுக்கு 3.7 லட்சம் ரூபாய் ஊதியத்தில் வேலைக்கு தேர்வு செய்து அவர்களுக்கான ஆபார் லெட்டர்களை வழங்காமல் தாமதம் செய்து வருவதாக அந்த புகாரில் கூறி இருந்தது. இந்த நிலையில்தான் இன்போசிஸ் நிறுவனம் அந்த 2000 பேரில் 1000 பேருக்கு தற்போது வேலைக்கு சேர்வதற்கான கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது.

இவர்கள் அனைவரும் மைசூரில் அக்டோபர் 7ஆம் தேதி முதல் பணியில் சேர்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது இன்போசிஸ் நிறுவனம். ஜூன் மாத நிலவரப்படி இந்த நிறுவனத்தில் 3, 15, 332 பேர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+