இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்களுக்கான வேரியபிள் பே மற்றும் சம்பள உயர்வு குறித்து பணிகளில் பிசியாக இருந்தாலும், உலகளவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் செயற்கை நுண்ணறிவு துறையில் வர்த்தகத்தை பெறுவதை உறுதி செய்து வருகிறது.
ஏற்கனவே இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் துறையில் பணியாற்ற துவங்கியுள்ளது மட்டும் அல்லாமல் பாராம்ட் கொடுத்தால் தேவையான கம்ப்யூட்டர் கோடிங் உருவாக்கும் கட்டமைப்பையும் உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனத்திற்கு போட்டியாக தற்போது இன்போசிஸ் நிறுவனமும் களத்தில் இறங்கியுள்ளது.

இன்போசிஸ் நிறுவனம் TOPAZ என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தை உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது. இது ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பத்தில் இயங்கும் முதல் தலைமுறை சர்வீசஸ், சொல்யூஷன்கள் மற்றும் பிளாட்பார்ம் ஆக விளங்க உள்ளது. TOPAZ தளத்தின் மூலம் அடுத்த தலைமுறை தொழில்நுட்ப வாய்ப்புகளை 360 கோணத்திலும் பெற உள்ளது.
இன்போசிஸ் TOPAZ மக்களின் திறன் மற்றும் வாய்ப்புகளை பெரிய அளவில் மேம்படுத்த உள்ளது, தனிப்பட்ட முறையிலும் சரி, வாடிக்கையாளர் மத்தியிலும் சரி இது எளிதாக சாத்தியமாகும் என இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக் கூறியுள்ளார். எங்களுடைய வாடிக்கையாளர் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பு, தேவை, டிமாண்ட் இப்பிரிவு சேவைக்கு உள்ளது எனவும் சலில் பாரிக் தெரிவித்துள்ளார்.
இன்போசிஸ் கோபால்ட் கிளவுட் மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் இணைப்பின் சக்தி தான் Infosys Topaz. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அல்லாமல் இன்போசிஸ் உள் நிர்வாகத்திற்கும் பல்வேறு தீர்வுகளை அளிக்கிறது. இது இன்போசிஸ் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் வருமான வளர்ச்சிக்கு புதிய பாதையாக அமையும்.
Infosys Topaz பல துறைகளுக்கு உடனடி சேவை அளிக்க தயாராக உள்ளது, சுமார் 12000 யூஸ் கேஸ், ஹெல்ப் சீட், பாஸ்ட் டிராக் நியூ ஐடியாக்களை கொண்டு உள்ளது. இதேவேளையில் Infosys Topaz சேவையை தற்போது பிரிட்டிஷ் டெலிகாம் பயன்படுத்தி வருகிறது. இந்த வாரம் பிரிட்டிஷ் டெலிகாம் சிஇஓ 50000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும், 10000 ஊழியர்கள் செய்யும் பணியை AI செய்யும் மாற்றங்கள் நடக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

Infosys Topaz அறிமுகத்தின் மூலம் இந்திய ஐடி ஊழியர்களுக்கு பெரும் ஜாக்பாட் கிடைத்துள்ளது, இப்புதிய தொழில்நுட்பம் பல வகையில் மக்களுக்கு நன்மை அளிக்கிறது என்பது உறுதியாகியுள்ளது. இதனாலேயே அதிகப்படியான வர்த்தகம் AI துறையில் வர துவங்கியுள்ளது.
இந்த நிலையில் Infosys Topaz கிடைக்கும் வர்த்தக வாய்ப்புகளில் இன்போசிஸ் ஊழியர்கள் பணியற்றுவது மட்டும் அல்லாமல் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தில் ஈடுப்படும் வாய்ப்பு ஐடி ஊழியர்களுக்கு கிடைத்துள்ளது. டிசிஎஸ் போலவே இன்போசிஸ்-ம் AI துறைக்குள் நுழைந்துள்ளது மூலம் அடுத்த 5 வருடத்தில் AI தொழில்நுட்பம் சார்ந்த சேவை துறையிலும் இந்தியா டாப்பாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
இது இந்திய ஐடி ஊழியர்களுக்கும் சாதகமாக அமையும், குறிப்பாக காக்னிசென்ட், அக்சென்சர் போன்று பணிநீக்க அறிவிப்பில் இருந்து இந்திய ஐடி சேவை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தப்பிக்க முடியும். டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனத்தை போல் ஹெச்சிஎல், விப்ரோ, டெக் மஹிந்திரா, LTIMindtree ஆகிய நிறுவனமும் AI சார்ந்த தொழில்நுட்ப சேவையை விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தோசை, பிரியாணிய விட்டுத் தள்ளுங்க: AI வளர்ச்சியையும் பதம்பார்க்கும் ஈரான் பிரச்சனை? எப்படி?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!



Click it and Unblock the Notifications