இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், மைசூர் கேம்பஸ்-ல் பணியாற்றி வந்த சுமார் 400 டிரைனி ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2024 ஆம் ஆண்டு அக்டோபரில் பணியில் சேர்ந்தவர்களில் பாதி பேர் இந்த பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று முறை தொடர்ச்சியாக நிறுவனத்தின் உள் தேர்வுகளில் தோல்வி அடைந்ததால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.
எப்போதும் இன்போசிஸ் கேம்பஸ் இன்டர்வியூவ், வாக்-இன் ஆகியவற்றின் மூலம் பிரஷ்ஷர்களை நியமிக்கும் போதும் அவர்களுக்கு 6 முதல் 8 மாதம் வரையில் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கும். இந்த பயிற்சி காலத்தில் இருப்பவர்களே டிரைனி ஊழியர்கள். இந்த 6-8 மாதத்தில் டிரைனி ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்கப்படும், இதேவேளையில் அவ்வபோது தேர்வும் வைக்கப்படும். இந்த தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களை பணியிலிருந்து நீக்கிவிடும்.

இந்த டிரைனி ஊழியர்கள் இரண்டரை ஆண்டுகள் காத்திருந்த பிறகு பணியில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டதால், ஐடி நிறுவனங்களின் வர்த்தகம் குறைத்ததால் இந்த தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் 400 ஊழியர்கள் பணிநீக்கம் செய்தது குறித்து இன்ஃபோசிஸ் விளக்கம் அளித்துள்ளது. மைசூர் கேம்பஸ்-ல் புதிதாக சேர்க்கப்பட்ட பிரஷ்ஷர் ஊழியர்கள் அனைவருக்கும் கடுமையான பயிற்சி மற்றும் தேர்வுகளும் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
இந்த உள் தேர்வுகளில் மூன்று முறை தோல்வி அடைந்தால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பது வேலை ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், இந்த தேர்வு செயல்முறை கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பணிநீக்கம் செய்யப்படும் 400 டிரைனி ஊழியர்களை சுமார் 50 பேர் கொண்ட குழுக்களாக அழைக்கப்பட்டு "mutual separation" கடிதங்களில் கையெழுத்திட வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த தேர்வுகள் மிகவும் கடினமானவை மற்றும் தோல்வி அடைய வடிவமைக்கப்பட்டவை என்று ஒரு பணி நீக்கம் செய்யப்பட்ட டிரைனி ஊழியர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த பயிற்சி கட்டத்தின் போது டிரைனி ஊழியர்கள் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மாலை 6 மணிக்குள் அலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஐடி ஊழியர்களுக்கான அமைப்பான நேசென்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி எம்ப்ளாயீஸ் செனட் (NITES) இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடம் அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கப்படவுள்ளதாகவும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் NITES கோரிக்கை விடுத்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தில் டிரைனி ஊழியர்கள் சிஸ்டம் இன்ஜினியர் (SE) மற்றும் டிஜிட்டல் ஸ்பெஷலிஸ்ட் இன்ஜினியர் (DSE) பதவிகளில் தேர்வு செய்யப்பட்டனர். 2022 ஆம் ஆண்டில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கடிதங்கள் வழங்கப்பட்டன. ஆனால் ஐடி துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக அவர்களின் பணியில் சேர்க்கை தாமதமானது.
More From GoodReturns

16 வருஷமா பார்த்த வேலை இப்போ இல்ல.. ஒரே ஈமெயிலில் மாறி போன வாழ்க்கை.. கண்ணீர் சிந்தும் ஐடி ஊழியர்!!

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications