கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஐடி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கு அனுமதி வழங்கின. கொரோனா பெருந்தொற்று முடிந்த பிறகு ஊழியர்கள் பழைய நடைமுறைப்படி அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டுமென ஐடி நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு தான் விரும்புகின்றனர்.
ஐடி நிறுவனங்கள் மாதத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கு கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்தாக வேண்டும் என தொடர்ச்சியாக கூறி வருகின்றன. அண்மையில் கூட டிசிஎஸ் நிறுவனம் வீட்டிலிருந்து மட்டுமே வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு அப்ரைசல்களை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் இன்போசிஸ் நிறுவனம் வீட்டிலிருந்து பணிபுரிவதற்கான பாலிசியில் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தில் ஹைபிரிட் முறையில் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். அதாவது ஒரு மாதத்திற்கு பத்து நாட்கள் கட்டாயம் அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டும் மீதமுள்ள நாட்கள் வீட்டிலிருந்து பணிபுரிந்து கொள்ளலாம். இவ்வாறு வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் தங்களுடைய வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான நாட்களை நீட்டிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு காலாண்டிற்கு கூடுதலாக அதிகபட்சம் 5 நாட்கள் மட்டுமே வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி வழங்கப்படும்.
அதற்கு மேல் ஊழியருக்கு தீவிர மருத்துவ நிலை இருக்கிறது அல்லது அவர் சார்ந்த இருக்கக்கூடியவர்களுக்கு மருத்துவ சூழல் இருந்தால் மட்டுமே வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான நாட்களை நீட்டித்து கொள்ள முடியும். இதற்கு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவ ஆவணங்களையும் மருத்துவரின் சான்றிதழையும் தாக்கல் செய்தாக வேண்டும். மற்ற எந்த காரணத்திற்காகவும் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான நாட்களை நீட்டிக்க முடியாது என இன்போசிஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
தற்போது ஹைபிரிட் முறையில் வேலை செய்யக்கூடிய பல்வேறு ஊழியர்களும் தங்களுடைய வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான நாட்களை நீட்டிக்க கோரி அடிக்கடி மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். ஊழியர்கள் இதற்கான மின்னஞ்சல்களை தங்களுடைய மேலாளர்களுக்கு அனுப்பாமல் நேரடியாக சிஸ்டமிடமே விண்ணப்பம் செய்து சம்பந்தப்பட்ட ஆவணங்களை தாக்கல் செய்து சிஸ்டம் அனுமதித்தால் மட்டுமே பெற முடியும் என தெரிவித்து இருக்கிறது.
இதன்படி தீவிர மருத்துவ சூழலினால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் கூடுதலாக 30 நாட்கள் வரை வீட்டிலிருந்து பணிபுரிவதற்கு அனுமதி பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விப்ரோ நிறுவனமும் ஒரு மாதத்திற்கு 15 நாட்கள் வரை வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என இருந்ததை 12 நாட்கள் என குறைத்து இருக்கிறது. மேலும் வாரத்தில் மூன்று நாட்கள் தலா ஆறு மணி நேரமாவது அலுவலகம் வந்து வேலை செய்திருக்க வேண்டும் என்ற அறிவித்தது.
டிசிஎஸ் நிறுவனத்தை பொறுத்தவரை ஊழியர்கள் அனைவரும் வாரத்தில் ஐந்து நாட்களும் அலுவலகத்திற்கு வந்து பணி புரிய வேண்டும். உடல்நிலை சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்களுக்கு இரண்டு நாட்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications