இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் சுமார் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான செயற்கை நுண்ணறிவு துறை சார்ந்த ஒப்பந்தத்தை வெளிநாட்டு நிறுவனத்திடம் செய்திருந்த நிலையில், தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக இன்போசிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இன்போசிஸ் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் தற்போது புதுப் பிரச்சனையாக 1.5 பில்லியன் டாலர மதிப்பிலான ஒப்பந்ததை இழந்துள்ளது, அதன் முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருக்கும். இன்போசிஸ் பங்குகள் செவ்வாய்க்கிழமை பெரும் சரிவை எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளது.

இன்போசிஸ் நிறுவனம் தனது செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பாக ஒரு பெயர் வெளியிடாத நிறுவனத்துடன் AI துறையில் சார்ந்து 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்திற்குக் கையெழுத்திட்டது, தற்போது இந்த ஒப்பந்தம் முறிந்துள்ளது.
இதுகுறித்து இன்போசிஸ் நிர்வாகம் பங்குச்சந்தையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், இன்போசிஸ் உடன் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் சர்வதேச நிறுவனம் ரத்து செய்ய முடிவு செய்துள்ளது, இதனால் இரு தரப்பும் மாஸ்டர் ஒப்பந்தத்தைத் தொடரப்போவது இல்லை எனச் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் படி இன்போசிஸ் நிறுவனத்தின் பிளாட்பார்ம்ஸ் மற்றும் AI சொல்யூஷன் மூலம் இந்தச் சர்வதேச நிறுவனத்தின் கட்டமைப்பை டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் மற்றும் வர்த்தக அமைப்புகளை மார்டனைசேஷன் செய்வது தான் திட்டம்.
இன்போசிஸ் ஆரம்பம் முதல் இந்தச் சர்வதேச நிறுவனத்தின் பெயர் பயன்படுத்தவில்லை, அதேபோல் இது தனது வாடிக்கையாளர் என்றும் இதுவரையில் கணக்கில் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பங்குச்சந்தையில் பெரிய பாதிப்பு இருக்காது எனத் தெரிகிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இன்போசிஸ் தலைமை நிதியியல் அதிகாரி நிலஞ்சன் ராய் சுமார் ஆறு ஆண்டுகள் இப்பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்த 2 வாரத்தில் ஒப்பந்தம் ரத்து குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவின் ஐடி சேவை நிறுவனத்தில் லார்ஜ் டீல் எனப்படும் 1 பில்லியன் டாலருக்கும் அதிக மதிப்புடைய ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படும் வேளையில் இன்போசிஸ் 1.5 பில்லியன் டாலர் திட்டத்தைத் தான் பெரிதும் நம்பிய AI துறையில் இருந்து இழந்துள்ளது.
இன்போசிஸ் நிர்வாகம் கடந்த 12மாதத்தில் மட்டும் 8க்கும் அதிகமான உயர் அதிகாரிகளை இழந்து ஒட்டுமொத்த உயர்மட்ட நிர்வாகமும் ஆட்டம் கண்டு இருக்கும் வேளையில் 1.5 பில்லியன் டாலர் திட்டத்தை இழந்துள்ளது சிஇஓ சலில் பாரிக்-ன் நிர்வாகச் சறுக்கல்-ஐ காட்டுகிறது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications