இன்போசிஸ் நிறுவனத்தில் 'மிகப்பெரிய' மாற்றம்.. 35% ஊழியர்களுக்கு வரப்போகும் அந்த ஒரு ஈமெயில்..!!

இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் ஏஐ துறையில் பெரிய அளவிலான வர்த்தகத்திற்கு டார்கெட் செய்யும் முன் தனது ஊழியர்கள் பட்டாளத்தை மேம்படுத்தவும், அடுத்த தலைமுறை வளர்ச்சியை நோக்கிச் செல்லவும் புதிய சிஇஓ Ashiss Kumar Das தலைமையில் மிகப்பெரிய மாற்றத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

இந்த மெகா மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ் இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் சுமார் 25% முதல் 33% பேரைச் சிறப்புத் திறன் கொண்ட Specialist பணிகளுக்கு மாற்ற இன்போசிஸ் திட்டமிட்டுள்ளது. தற்போது பெரும்பகுதி ஊழியர்கள் பொதுவான ஐடி பணிகளில் இருக்கும் நிலையில் இவர்களை அடுத்த தலைமுறை பணிகளான செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் ஆகிய துறைகளில் பணியாற்றும் வகையில் மாற்ற உள்ளனர்.

 இன்போசிஸ் நிறுவனத்தில் 'மிகப்பெரிய' மாற்றம்.. 35% ஊழியர்களுக்கு வரப்போகும் அந்த ஒரு ஈமெயில்..!!

இதேபோல் ஏஐ துறையில் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக 6,000 Frontier Engineers என்று சிறப்பு நிபுணர்களை பணியில் புதிதாக பணியமர்த்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏஐ வந்த பின்பு ஒவ்வொரு டெக் நிறுவனமும் பெரிய அளவிலான பணிநீக்கத்தைச் செய்யத் திட்டமிட்டு வரும் வேளையில் இன்போசிஸ் ஏஐ துறையிலும், புதிய தொழில்நுட்பத்தால் வர்த்தகத்தை உருவாக்கவும் மாபெரும் ஊழியர்கள் மறுசீரமைப்பு திட்டத்தைச் செயல்படுத்துகிறது.

சமீபத்தில் வாஷிங்டன்-ல் நடைபெற்ற இன்போசில் நிறுவனத்தின் 3 நாள் Americas Confluence என கூட்டத்தில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியானது. மேலும் இதை பல தரப்பினர் உறுதி செய்துள்ளனர். மேலும் இன்போசிஸ் தனது ஊழியர் பிரமிட் கட்டமைப்பை மாற்ற திட்டமிட்டு உள்ளது.

Also Read

அதாவது காலம் காலமாகக் கல்லூரி மாணவர்கள், லேட்டரல் ஊழியர்களையே அதிகம் பணியில் அமர்த்தி இன்போசிஸ் வர்த்தகம் நடத்தி வந்தது. ஆனால் ஏஐ வந்த பின்பு மணிநேரம், கால அடிப்படையில் பில்லிங் செய்வதைத் தாண்டி திட்ட அடிப்படையில் பில்லிங் செய்யத் துவங்கியுள்ளது.

இதனால் ஒவ்வொரு திட்டத்தையும் வேகமாக முடிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கும் காரணத்தால் அதிக அனுபவம், திறன் கொண்ட நிபுணர்களை அதிகரிப்பதே இன்போசிஸின் முக்கிய இலக்காக மாறியுள்ளது.

Recommended For You

இந்த 33 சதவீத ஊழியர்களின் மாற்றம் என்பது ஏற்கனவே பணியில் உள்ள ஊழியர்களையும், புதிதாகச் சேர்க்கப்பட உள்ள ஊழியர்களையும் சேர்த்து மேற்கொள்ளப்பட்டும் மாற்றங்களாக இருக்கும். உதாரணமாகப் புதிதாக இன்போசிஸ் நிறுவனத்தில் சேரும் ஊழியர் ஏஐ, புதிய தொழில்நுட்பத்தில் அனுபவம் கொண்டு இருந்தால் தானாக இந்த 33 சதவீத ஊழியர்கள் பிரிவில் வந்துவிடுவார்.

மேலும் தற்போது சாதாரண பணியில் இருக்கும் ஊழியர்கள் சிறப்பு திறன்களை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். இந்த புதிய அணுகுமுறை மூலம் இன்போசிஸ் நிறுவனத்தில் Talent Pyramid கட்டமைப்பில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+