ஐடி ஊழியர்களுக்கு கடந்த ஓராண்டு காலமாகவே போறாத காலமாக இருக்கிறது. ஒருபுறம் ஏஐ வருகை, மறுபுறம் பணிநீக்கம், ஊதிய உயர்வு தாமதம் என தொடர்ச்சியாக பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் ஐடி ஊழியர்களுக்கு புது பிரச்சினை வெடித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் தங்களுடைய ஊழியர்களுக்கு முக்கியமான ஒரு உத்தரவினை பிறப்பித்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏராளமான நிறுவனங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு அனுமதி தந்தன. பெருந்தொற்று முடிந்து இயல்புநிலை திரும்பிய பிறகு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரவேண்டும் என கூறின. ஆனால் பெரும்பாலான ஊழியர்கள் அதனை ஏற்க மறுத்தனர்.

இந்த நிலையில் டிசிஎஸ் போன்ற பல்வேறு ஐடி நிறுவனங்களும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்வதை கட்டாயமாக்கிவிட்டன. இந்திய ஐடி நிறுவனங்களிலேயே ஹைபிரிட் வேலைமுறையை பின்பற்றி வந்த ஒரே நிறுவனம் இன்போசிஸ் தான். ஊழியர்கள் மாதத்தில் 10 நாட்கள் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் மற்ற நாட்கள் வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என அறிவித்திருந்தது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஜாப் லெவல் 7 என்ற நிலையில் இருக்கும் ஊழியர்கள் வாரத்தில் 4 நாட்கள் கட்டாயம் அலுவலகம் வர வேண்டும் என அறிவித்தது. இந்நிலையில் தற்போது ஜாப் லெவல் 6பிளஸ் நிலையில் இருக்கும் ஊழியர்களும் அலுவலகம் வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முதலில் மூத்த நிலையில் இருக்கக்கூடிய ஊழியர்கள் அதாவது சீனியர் மேனேஜர்கள் , டெலிவரி மேனேஜர்கள், ப்ரோக்ராம் டைரக்டர் போன்ற மூத்த நிலை அதிகாரிகள் வாரத்தில் நான்கு நாட்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என அறிவித்தது. இனி ஜாப் லெவல் 6 பிளஸ் என்ற பிரிவில் இருக்கக்கூடிய ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் கட்டாயம் அலுவலகம் வர உத்தரவிடப்பட்டுள்ளது.
படிப்படியாக இது அனைத்து ஊழியர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஊழியர்களுக்கு மனித வளத்துறை அதிகாரிகள் அனுப்பி உள்ள மின்னஞ்சலில் இனி நீங்கள் வாரத்தில் நான்கு நாட்கள் கட்டாயம் அலுவலகம் வந்து வேலை செய்தாக வேண்டும் என குறிப்பிட்டு இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் மனிதவளத்துறை அதிகாரிகள் எத்தனை ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் அலுவலகம் வந்து வேலை செய்கிறார்கள் என்ற தரவினை ஆய்வு செய்யும் என தெரிவித்திருக்கிறது.
முதலில் தொடர்ச்சியாக 10 நாட்கள் அலுவலகம் வந்தால் போதும் என அறிவித்திருந்தது. ஆனால் இப்போது மாதத்தில் ஒவ்வொரு வாரமும் அலுவலகம் வந்து வேலை செய்யும் வகையில் இந்த 10 நாட்களை பிரித்து கொள்ளுங்கள் என மூத்த அதிகாரிகள் ஜூனியர் ஊழியர்களுக்கு கூறுகிறார்களாம்.இதனால் இன்போசிஸ் நிறுவனமும் படிப்படியாக அனைத்து ஊழியர்களையும் அலுவலகம் வந்து வேலை செய்வதை கட்டாயமாக்கி வருவது தெரிய வருகிறது. ஜனவரி மாதத்திலேயே ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் நாட்களை நீட்டிப்பதற்கு கடுமையான நிபந்தனைகளை இன்போசிஸ் வெளியிட்டிருந்தது.


Click it and Unblock the Notifications