இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு குறித்து முக்கியமான அப்டேட் வந்துள்ளது. இன்போசிஸ் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு என்ற வார்த்தையைக் கேட்டாலே கோபம் வரும் அளவு மோசமான சம்பள உயர்வை சில நாட்களுக்கு முன்பு கொடுத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்போசிஸ் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வைப் பகுதி பகுதியாக அளிப்பதாகவும், ஜனவரி மாதம் மீண்டும் சம்பள உயர்வு கடிதம் சில ஊழியர்களுக்கு அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி மாதம் சம்பள உயர்வு வரும் என்பதை இன்போசிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், சில பிஸ்னஸ் யூனிட்கள் தங்களுடைய பட்ஜெட் மறுசீரமைப்பை செய்து வரும் வேளையில், ஜனவரி மாதம் சில இன்போசிஸ் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வுக்கான கடிதம் அளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வை ஜூன்/ஜூலையில் அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் இருந்து கணக்கிட்டு அளிக்கப்படும். ஆனால் இந்த வருடம் சுமார் 8 மாதமாகச் சம்பள உயர்வை அளிக்காமல் செப்டம்பர் காலாண்டில் ஊழியர்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக நவம்பர் 1 ஆம் தேதி முதல் சம்பள உயர்வை அளிக்கப்பட்டதாகக் கூறி பெரிய வேட்டு வைத்தது.

சம்பள உயர்வுக்காகக் காத்திருந்த ஊழியர்களுக்கு டிசம்பர் 15 ஆம் தேதி வரையில் சம்பள உயர்வு கடிதத்தை அளிக்காமல் சில நாட்களுக்கு முன்பு கொடுத்தது. இந்த வருடம் இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் வெறும் 40 சதவீத ஊழியர்களுக்கு மட்டுமே சம்பள உயர்வு கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
கொடுக்கப்பட்ட சம்பள உயர்வு 4 சதவீதம், 5 சதவீதம் அதிகப்படியாக 10 சதவீதம் மட்டுமே இருந்ததாக இன்போசிஸ் ஊழியர்கள் புலம்பினர். இந்த வருட சம்பள உயர்வை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துப் பெரிய அளவில் குறைத்தது.


Click it and Unblock the Notifications