இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், 2025ஆம் நிதியாண்டில் ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை 9% உயர்ந்து 112 ஆக இருப்பதாக அறிவித்துள்ளது. FY24-ல் இந்த எண்ணிக்கை 17% குறைந்து 103 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒருப்பக்கம் ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு தாமதமாகவும், வேரியபிள் பே குறைக்கப்பட்டும் சம்பளம் பெற்று வரும் வேளையில் உயர் மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் அதிகப்படியான சம்பளத்தை பெற்று வருகின்றனர். சொல்லப்போனால் இன்போசிஸ் சிஇஓ 22 சதவீத சம்பள உயர்வுடன் சுமார் 80.6 கோடி ரூபாயை 2025 நிதியாண்டில் சம்பளமாக பெற்றுள்ளார்.

ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் பெறும் 112 ஊழியர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்கள் மட்டுமே உள்ளனர் என்பது முக்கியமான தகவல். இன்போசிஸ் நிறுவனத்தின் டாப் 10 மூத்த நிர்வாகிகள் இதில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி (CFO) ஜேயேஷ் சங்கராஜ்கா ரூ.8.8 கோடி ஊதியத்துடன் முதலிடத்தில் உள்ளார், அதைத் தொடர்ந்து தலைமை டெலிவரி அதிகாரிகளான ஆர்.தினேஷ் ரூ.7.2 கோடி சம்பளத்துடனும், சதீஷ் எச்.சி ரூ.6.9 கோடி உடனும் டாப் 3 இடத்தை பிடித்துள்ளனர்.
1 கோடி ரூபாய்க்கு மேல் சம்பள வாங்கும் ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கு பகுதியினர் 2000-க்கு முன்பும், சிலர் 1990-ல் இன்ஃபோசிஸில் சேர்ந்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் சாப்ட்வேர் டெவலப்பர்களாக தனது பணியை இன்போசிஸ் நிறுவனத்தில் தொடங்கி, பின்னர் நிர்வாகம் அல்லது மூத்த நிர்வாக பொறுப்புகளுக்கு உயர்ந்தவர்கள். இந்த பட்டியலில் இருக்கும் ஒவ்வொருவரும் மாதம் சராசரியா ரூ.8.5 லட்சத்திற்கு மேல் சம்பளம் பெற்றுள்ளனர்.
உலகளாவிய புவிசார் அரசியல் மற்றும் வர்த்தக நிச்சயமற்ற தன்மைகள் மத்தியில் இன்போசிஸ் நிர்வாரம் ஊழியர்களின் சம்பள உயர்வு, வேரியபிள் பே, பெரிய ஒப்பந்தங்களின் தொடக்க செலவுகள், மற்றும் நிறுவனம் / வர்த்தகம் கையகப்படுத்தல் தொடர்பான செலவுகள் போன்ற பல சவால்களுக்கு மத்தியில், 2025-ல் தனது ஆப்ரேடிங் மார்ஜின் அளவை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 21.1% ஆக அறிவித்துள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025ஆம் நிதியாண்டில் ஊழியர்களின் சம்பளத்திற்காக மட்டுமே சுமார் ரூ.85,950 கோடி செலவு செய்கிறது, இது கடந்த ஆண்டை காட்டிலும் 4 சதவீதம் அதிகம். இது நிறுவனத்தின் மொத்த வருவாயான ரூ.1.63 லட்சம் கோடியில் 53% தொகை சம்பளத்திற்காக மட்டுமே செலவு செய்கிறது. வருவாய் அடிப்படையில் இன்போசிஸ் இந்தியாவின் இரண்டாவது பெரிய IT நிறுவனமாக தொடர்கிறது.
கடந்த ஆறு ஆண்டுகளில், இன்போசிஸ் நிறுவனத்தில் ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை:
2020 நிதியாண்டில் : 74 (குறைந்தபட்சம்)
2021 நிதியாண்டில் : 85
2022 நிதியாண்டில் : 100
2023 நிதியாண்டில் : 124 (அதிகபட்சம்)
2024 நிதியாண்டில் : 103
2025 நிதியாண்டில் : 112
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ரூ.40,000 போனஸ் அறிவிப்பு..!! ஆனால் ஒரு கண்டிஷன்..!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 முறை பதவி உயர்வு.. இதுக்கு மேல என்ன வேண்டும் சொல்லுங்க..!!

ஈரான் தாக்குதல்: மொத்தமாக முடங்கிய UAE.. பங்குச் சந்தைகள், IT நிறுவனங்கள், பள்ளிகள் மூடல்..!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!



Click it and Unblock the Notifications