இந்தியாவின் ஐந்தாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக விளங்கும் டெக் மஹிந்திரா-வின் புதிய நிர்வாக இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் மோஹித் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த மோஹித் ஜோஷி என்று கேட்பவருக்கான பதில் இன்போசிஸ் நிறுவனத்தின் முக்கிய வர்த்தக பிரிவான நிதியியல் சேவை பிரிவின் தலைவர் ஆவார். இவருடைய வெளியேற்றம் கட்டாயம் பெரும் தாக்கத்தை இன்போசிஸ் நிறுவனத்தில் ஏற்படுத்தும்.
இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் மோஹித் ஜோஷி சுமார் 22 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்து தற்போது 5வது இடத்தில் இருக்கும் டெக் மஹிந்திராவின் உச்ச பதிவியில் அமர்கிறார்.
இன்போசிஸ்
இன்போசிஸ் நிறுவனத்தில் விஷால் சிக்கா சிஇஓ-வாக நியமிக்கப்பட்டதில் இருந்து அதிகளவிலான உயர் அதிகாரிகள் வெளியேறினர், ஆனால் சலில் பாரிக் சிஇஓ-வாக வந்த பின்பு வெளியேரும் உயர் அதிகாரிகள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்தது.
எஸ் ரவி குமார்
ஆனால் கடந்த 6 மாதத்தில் மோஹித் ஜோஷி இன்போசிஸ்-ஐ விட்டு வெளியேறிய 2வது உயர் அதிகாரியாகும். 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எஸ் ரவி குமார் இன்போசிஸ்-ல் சுமார் 20 வருட பணியாற்றிய பின்பு வெளியேறி தற்போது காக்னிசென்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக உயர்ந்துள்ளார்.
டெக் மஹிந்திரா சிஇஓ மோஹித் ஜோஷி
இதேபோல் இந்தியாவின் 5வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டெக் மஹிந்திரா -வின் தற்போதைய CEO மற்றும் MD ஆக பணியாற்றி வரும் சிபி குர்னானி இந்த ஆண்டு டிசம்பரில் ஓய்வு பெற உள்ளார். இவருடைய இடத்திற்கு பல மாதங்களாக புதிய நபரை தேடி வந்த டெக் மஹிந்திரா நிர்வாகம் மோஹித் ஜோஷி-ஐ நியமித்துள்ளது.
டிசம்பர் 20 முதல்
மோஹித் ஜோஷி டிசம்பர் 20, 2023 முதல் டிசம்பர் 19, 2028 வரை 5 ஆண்டுகளுக்கு டெக் மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்று டெக் மஹிந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விடுமுறை
மோஹித் ஜோஷி இன்போசிஸ் நிறுவனத்தில் கடைசி நாள் ஜூன் 9 என்று இன்போசிஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜூன் 9 முதல் டிசம்பர் 20 வரையில் விடுமுறையில் இருப்பார் என டெக் மஹிந்திரா விளக்கம் கொடுத்துள்ளது.
இன்போசிஸ் அறிக்கை
மோஹித் ஜோஷி வெளியேற்றம் குறித்து இன்போசிஸ் தனது அறிக்கையில், அவருடைய சேவைகளுக்காகவும், நிறுவனத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காகவும் இயக்குநர்கள் குழு பாராட்டுகளை பதிவு செய்கிறது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிதிச் சேவைகள் மற்றும் ஹெல்த்கேர், லைப் சையின்ஸ்
மோஹித் ஜோஷி இன்போசிஸில் நிதிச் சேவைகள் மற்றும் ஹெல்த்கேர், லைப் சையின்ஸ் வர்த்தகங்களை நிர்வாகம் செய்து வருகிறார். இவர் கட்டுப்பாட்டில் இருக்கும் 3 பிரிவுகளும் வேகமாக வளர்ச்சி அடைய கூடிய பிரிவுகள், இவருடைய வெளியேற்றத்தை ஈடு செய்ய இன்போசிஸ் நியமிக்கும் முக்கிய அதிகாரி அல்லது அதிகாரிகள் யார் என்பது தான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.
எட்ஜ்வெர்வ் சிஸ்டம்ஸ்
மோஹித் ஜோஷி இன்போசிஸ் கிளை நிறுவனமான எட்ஜ்வெர்வ் சிஸ்டம்ஸ் லிமிடெட்-ன் தலைவராகவும் பணியாற்றினார். இது இன்போசிஸ் நிறுவனத்தின் மென்பொருள் மற்றும் தயாரிப்புப் பிரிவாகும், இதில் வங்கி மென்பொருள் பினாக்கிள் பிரிவும் அடங்கும்.
மோஹித் ஜோஷி 20 வருட பயணம்
மோஹித் ஜோஷி 2000 ஆம் ஆண்டில் இன்போசிஸ் நிறுவனத்தில் சேர்ந்தார், அதன் பின்னர் நிறுவனத்தில் வெவ்வேறு பதவிகளில் பணியாற்றினார். தற்போதைய பதவிக்கு முன்பு ஐரோப்பாவில் நிதிச் சேவைகள் வணிகத்தை வழிநடத்தினார். 2007 ஆம் ஆண்டில், இன்போசிஸ் மெக்ஸிகோவின் தலைமை நிர்வாக அதிகாரியாக மோஹித் நியமிக்கப்பட்டார் மற்றும் லத்தீன் அமெரிக்காவில் முதல் துணை நிறுவனத்தை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications