இன்ஃபோசிஸ்-ல் மீண்டும் பணிநீக்கம்.. 195 டிரைனி ஊழியர்களின் வேலை காலி..!!

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ், தனது மைசூரு வளாகத்தில் பயிற்சி பெற்று வந்த 195 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. உள் மதிப்பீட்டில் தேர்ச்சி பெறாததே இந்த பணிநீக்க நடவடிக்கைக்குக் காரணம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 29ஆம் தேதி வெளியான நிறுவனத்தின் மின்னஞ்சல்கள் மூலம் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 680 பேர் கொண்ட பயிற்சி குழுவில் இருந்து இந்த 195 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த புதிய பணிநீக்கச் சுற்றுடன் சேர்த்து, பிப்ரவரி மாதம் முதல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட டிரைனிகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 800 ஆக உயர்ந்துள்ளது. இது இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் கடந்த நான்கு மாதங்களில் நடைபெற்றுள்ள நான்காவது பெரிய அளவிலான பணிநீக்கமாகும். முன்னதாக பிப்ரவரியில் 300க்கும் மேற்பட்டோரும், மார்ச் மாதத்தில் 30 முதல் 35 பேரும், ஏப்ரல் 18ஆம் தேதி சுமார் 240 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இன்ஃபோசிஸ்-ல் மீண்டும் பணிநீக்கம்.. 195 டிரைனி ஊழியர்களின் வேலை காலி..!!

அப்படி பணிநீக்கம் செய்யப்பட்ட டிரைனிகளுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனம் மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது. சுமார் 250 டிரைனிகள் அப்கிராட் (UpGrad) மற்றும் என்ஐஐடி (NIIT) போன்ற நிறுவனங்கள் வழங்கும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் இணைந்துள்ளனர். மேலும், சுமார் 150 பேர் அவுட்பிளேஸ்மென்ட் (Outplacement) சேவைகளுக்காக பதிவு செய்துள்ளனர். இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது பிபிஎம் (BPM - Business Process Management) டிரைனி ஊழியர்கள் அப்கிராட் நிறுவனத்துடனும், ஐடி (IT - Information Technology) பயிற்சிக்காக என்ஐஐடி நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் பணிநீக்கம் செய்யப்பட்ட டிரைனிகள் புதிய திறன்களைப் பெற்று வேறு வேலைவாய்ப்புகளைத் தேடிக்கொள்ள முடியும்.

இந்த பணிநீக்கங்களுக்கு முக்கிய காரணம், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தேவை குறைந்து வருவதுதான் என்று கூறப்படுகிறது. நிறுவனம் நடப்பு நிதியாண்டில் வருவாய் வளர்ச்சி 0 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை மட்டுமே இருக்கும் என்று கணித்துள்ளது. இது, அந்நிறுவனத்தின் முக்கிய சந்தைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மையைக் காட்டுகிறது.

பணிநீக்கம் செய்யப்பட்ட டிரைனிகளுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், உங்களுக்கு கூடுதல் பயிற்சி நேரம், சந்தேகங்களை நிவர்த்திக்கும் அமர்வுகள், பல மாதிரி மதிப்பீடுகள் மற்றும் மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதிலும் பொதுவான அடித்தள பயிற்சித் திட்டத்தில் தேவையான தகுதி அளவுகோல்களை நீங்கள் பூர்த்தி செய்யவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும், இதன் விளைவாக, பயிற்சித் திட்டத்திற்கான உங்கள் பயணத்தைத் தொடர முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல், மாத தொடக்கத்தில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலைப் போன்றே உள்ளது.

இருப்பினும், இன்ஃபோசிஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட டிரைனிகளுக்கு மாற்று தொழில் பாதையை வழங்குகிறது. அதன்படி, இன்ஃபோசிஸ் வணிக செயல்முறை மேலாண்மை (BPM) பிரிவில் உள்ள சாத்தியமான பணிகளுக்கு 12 வார பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியாளர்கள் சுமார் 2.5 ஆண்டுகளுக்கும் மேலான தாமதத்திற்குப் பிறகு பணியமர்த்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த பிபிஎம் படிப்பைத் தேர்வு செய்பவர்களுக்கு பயிற்சியை நிதியுதவி செய்வதாகவும் இன்ஃபோசிஸ் உறுதியளித்துள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட டிரைனிகளுக்கு ஒரு மாத கருணைத் தொகை மற்றும் பணிநீக்கத்திற்கான கடிதத்தையும் நிறுவனம் வழங்குகிறது.

பிபிஎம் தொழில் பாதையை விரும்பாத டிரைனிகளுக்கு, நிறுவனம் மைசூரிலிருந்து பெங்களூருக்கு போக்குவரத்து வசதியையும், அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல நிலையான பயணப்படியையும் ஏற்பாடு செய்யும். தேவைப்பட்டால், பயிற்சியாளர்கள் புறப்படும் தேதி வரை மைசூரில் உள்ள பணியாளர் பராமரிப்பு மையத்தில் தங்குமிட வசதியையும் பெறலாம்.

இதற்கிடையே, பிப்ரவரி 27ஆம் தேதி கர்நாடக தொழிலாளர் துறை, இந்த டிரைனிகளின் வெளியேற்றம் தொடர்பான எந்தவொரு தொழிலாளர் சட்ட மீறல்களிலிருந்தும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை விடுவித்தது. சேகரிக்கப்பட்ட ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தொழிலாளர் துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைவரும் டிரைனிகள் மட்டுமே, சிலர் மூன்று மாதங்கள் மட்டுமே பயிற்சி பெற்றவர்கள் இதை நாம் பணிநீக்கம் என்று அழைக்க முடியாது. வழக்கமான வேலைவாய்ப்பு இருக்கும்போது மட்டுமே பணிநீக்கம் பொருந்தும். இங்கு முதலாளி-பணியாளர் உறவு இல்லை. அவர்கள் அனைவரும் டிரைனிங் பெற்றவர்கள், ஊழியர்கள் அல்ல என்று கூறினர்.

முன்னதாக, டிரைனி பணிநீக்கங்கள் குறித்த அறிக்கைகளைத் தொடர்ந்து, கர்நாடக தொழிலாளர் துறை அதிகாரிகள் பெங்களூரு மற்றும் மைசூரில் உள்ள இன்ஃபோசிஸ் வளாகங்களுக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். மேலும், மத்திய தொழிலாளர் அமைச்சகத்திடமிருந்து வந்த மின்னஞ்சலில், கர்நாடக தொழிலாளர் ஆணையர் மற்றும் தொழிலாளர் செயலாளருக்கு இந்த விஷயத்தை ஆராய்ந்து சர்ச்சையைத் தீர்க்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

இன்ஃபோசிஸ் நிறுவனம் இதுவரை கூறி வந்ததன்படி, மதிப்பீட்டில் தோல்வியடைந்தால் டிரைனி ஊழியர்கள் நிறுவனத்தில் தொடர முடியாது என்பது தற்போதைய கொள்கை. இந்த கொள்கையின் அடிப்படையிலேயே இந்த பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட டிரைனிகளுக்கு மாற்று வாய்ப்புகளை வழங்குவதற்கான முயற்சிகளையும் நிறுவனம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+