மைசூர் இன்ஃபோசிஸ் கேம்பஸ்-ல் சிறுத்தை நுழைந்த சம்பவம் கடந்த 10 நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் வேளையில், இந்த வளாகத்தில் புதன்கிழமை 3வது முறையாகச் சிறுத்தை சுற்றித்திரியும் புகைப்படம் கேமராவில் பதிவாகியுள்ளது.
பல நாட்களாக வனத்துறையினர் போராடும் வேளையில், தொடர்ந்து அனைவருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு கையில் சிக்காமல், கேமராவில் மட்டும் சிக்கும் கில்லாடி சிறுத்தையாக மாறியுள்ளது. இதேவேளையில் இன்போசிஸ் கேம்பஸ்-ல் இருக்கும் ஊழியர்கள் அனைவருக்கும் பல தரப்பு விதிமுறைகள் உடன் தொடர்ந்து இயங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது முறையாகச் சிறுத்தை கண்டறியப்பட்டுள்ளது, இந்த முறை வெப்பமான நிலை கண்டறியும் ட்ரோன் மூலம் கண்டறியப்பட்டது. காலை 12:30 மணி அளவில், மழைநீர் வெளியேற்றம் குழாய்க்கு அருகேயுள்ள பகுதியில் சிறுத்தை இருப்பதை வனத்துறையினர் உறுதிப்படுத்தினர்.
சிறுத்தை, இன்போசிஸ் வளாகத்தின் முக்கிய பணி மற்றும் குடியிருப்பு பகுதிகளிலிருந்து தொலைவில் வசிக்கலாம் அல்லது மழைநீர் வெளியேற்றும் குழாயை அடிக்கடி நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
வனப்பாதுகாவலர் எம். மாலதி பிரியா, சிறுத்தை கண்டறியப்பட்ட பகுதிகளுக்கு அருகில் முன்பு அமைக்கப்பட்ட அனைத்து கூண்டுகளும் இன்னும் அகற்றப்படாமல் இருக்கும் காரணத்தால் விரைவில் சிறுத்தை பிடிக்கப்படும் என பொதுமக்களுக்கு உறுதியளித்தார். இதேவேளையில் சிறுத்தை தொடர்ந்து கண்காணிக்கவும், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் மைசூரில் இன்போசிஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய கேம்பஸ் இந்தியாவில் சேர்வு செய்யப்பட்டும் பெரும் பகுதி பிரஷ்ஷர்ஸ் ஊழியர்களுக்கான பயிற்சி இடமாக விளங்கி வருகிறது, இதனால் வருடம் முழுவதும் அதிகப்படியான ஊழியர்கள் இருப்பது வழக்கம். இந்த வளாகம் வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளதால் அடிக்கடி வன விலங்குகள் வருவதும், செல்வதும் வழக்கம். இப்படிதான் டிசம்பர் 31ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் சிறுத்தை ஒன்று நடமாடியது கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
இந்த நிலையில் புத்தாண்டு தினம் முதல் சிறுத்தையைப் பிடிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதேவேளையில் இன்போசிஸ் நிர்வாகம் ட்ரெய்னி ஊழியர்களுக்கு அனைவருக்கும் முக்கியமான விதிமுறைகளைக் கொடுத்து, இதனைக் கட்டாயம் பாலோ செய்யும்படி உத்தரவிட்டு உள்ளது.
மைசூர் கேம்பஸ்-ல் பணியாற்றும் அனைத்தும் ஊழியர்களும் குறிப்பிட்ட பாதைகளை ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தில் குறிப்பிட்டு வரைபடத்தையும் வழங்கியுள்ளனர். இந்த வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாதைகளை மட்டுமே பயன்படுத்தி வேலை செய்யும் இடம் மற்றும் கேண்டின் உள்ளிட்டவருக்கு அவர்கள் சென்று வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியாக யாரும் நடந்து செல்லக்கூடாது என்றும் குறைந்தது 5 பேர் கொண்ட குழுவாக மட்டுமே செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரும் நடை பாதைகளில் இருக்கும் பெஞ்ச்களில் தனியாக அமர்ந்திருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவை இல்லாமல் யாரும் கட்டிடத்தை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் இன்போசிஸ் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
இதோடு அதிக எண்ணிக்கையிலான ஆட்கள் ஒரே இடத்தில் கூடியிருப்பது, அதிக சத்தத்தை எழுப்புவது போன்றவை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், இதன் மூலம் சிறுத்தைக்கு மனிதர்கள் இருப்பது தெரியக்கூடும் என்பதைல் இத்தகைய செயல்களை செய்யக்கூடாது என இன்போசிஸ் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications