Infosys Nandan Nilekani : 6 வருடம் சம்பளமே வாங்கலையாம்..!!

இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் சமீபத்தில் தனது வருடாந்திர அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில் இன்போசிஸ்-ன் நிதி நிலையை தாண்டி முக்கிய உயர் அதிகாரிகளின் சம்பளம் விபரம் வெளியானது.

இன்போசிஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் டிஜிட்டல், கிளவுட், ஆட்டோமேஷன் ஆகிய துறைகளில் சிறப்பான வர்த்தகத்தை பெற்று லாபம், வருவாயில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்து. ஆனாலும் 2023 ஆம் ஆண்டில் ஜூன் 6 ஆம் தேதி வர்த்தக முடிவு வரையில் 16.09 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

Infosys Nandan Nilekani : 6 வருடம் சம்பளமே வாங்கலையாம்..!!

இந்த நிலையில் 2022-23 ஆம் நிதியாண்டில் இன்போசிஸ் சேர்மன் ஆக இருக்கும் நந்தன் நிலேகனி ஆகஸ்ட் 2017 முதல் இப்பதவியில் அமர்த்தப்பட்டார். அப்போது முதல் 2022-23 ஆம் நிதியாண்டு வரையில் கிட்டத்தட்ட 6 வருடம் எவ்விதமான சம்பளமும் வாங்காமல் தனது பணியை இன்போசிஸ் நிர்வாகத்தில் செய்து வருகிறார்.

இன்போசிஸ் தனது வருடாந்திர அறிக்கையில் AI என்ற சொல்லை 56 முறையும், Aritifical Intelligence என்ற சொல்ல-ஐ 4 முறையும் பயன்படுத்தியுள்ளது மூலம் இன்போசிஸ் தனது வர்த்தக பாதையை எந்த பக்கம் கொண்டு செல்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக் 2022-23 நிதியாண்டில் அவருடைய வருடாந்திர ஊதியம் 21 சதவீதம் குறைந்து 56.4 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த நிதியாண்டில் 2015 பங்கு விருப்பத் திட்டத்தின் கீழ் 1,24,783 பங்குகளையும், 2019 திட்டத்தின் கீழ் 73,962 பங்குகளை பணமாக்கியுள்ளார்.

இதன் மூலம் 30.6 கோடி ரூபாய் பங்கு விருப்பங்கள் வாயிலாகவும், 18.73 கோடி ரூபாய் வேரியபிள் பே தொகையும், ஓய்வூதிய பலன்களாக ரூ.45 லட்சமும் பெற்றுள்ளார் சலில் பாரிக். 2022 ஆம் நிதியாண்டில் சலில் பாரிக் 71 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றார். இதில் பங்கு விருப்பங்கள் வாயிலாக 52.33 கோடி ரூபாயை பெற்றார்.

இதேபோல் இன்போசிஸ் தலைமை நிதி அதிகாரியான நிலஞ்சன் ராய் சம்பளம் 28% உயர்ந்து 10.61 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த மார்ச் மாதம் BFSI பிரிவின் தலைவர் மற்றும் president பதவியில் இருந்து விலகிய மோஹித் ஜோஷிக்கு 57.3 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. மோஹித் ஜோஷி தற்போது டெக் மஹிந்திராவின் புதிய சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+