பெங்களூர்: வேட்டி, சட்டையில் ஐஸ்கிரீம் சாப்பிடும் நாராயணமூர்த்தி.. அட பக்கத்துல அக்ஷதா வேற..!

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவியும் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளுமான அக்ஷதா மூர்த்தி தனது தந்தையுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டு மகிழும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் தந்தையும் மகளும் ஒரு குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது பெங்களூரில் பிரபலமான ஒரு ஐஸ்கிரீம் பார்லரில் இருவரும் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

பெங்களூர்: வேட்டி, சட்டையில் ஐஸ்கிரீம் சாப்பிடும் நாராயணமூர்த்தி.. அட பக்கத்துல அக்ஷதா வேற..!

பெங்களூரு ஜெயநகரில் உள்ள ஐகானிக் கார்னர் ஹவுஸில் அக்ஷதா மூர்த்தியும், நாராயணமூர்த்தி வேட்டி சட்டையுடன் ஐஸ்கிரீமை ருசித்துக்கொண்டிருந்த புகைப்படம் இது. சாதாரண உடையில், அப்பா - மகள் இருவரும் ஐஸ்கிரீம் கோப்பைகளை பிடித்துக்கொண்டு கேமராவுக்கு போஸ் கொடுத்தனர்.

அக்ஷதா மூர்த்தி இங்கிலாந்தின் பிரதமரும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவருமான ரிஷி சுனக்கை மணந்தார், இதன் மூலம் இங்கிலாந்து அரசின் முதல் பெண்மணியாக உள்ளார் அக்ஷதா மூர்த்தி. ரிஷி சுனக் பிரதமராவதற்கு முன்பே அக்ஷதா மூர்த்தி அரசியல் வட்டத்திலும், தொழிற்துறையிலும் பிரபலமாக இருந்தவர்.

கடந்த வாரம், எழுத்தாளர் சித்ரா பானர்ஜி திவாகருணியின் "An Uncommon Love: The Early Life of Sudha and Narayana Murthy" புத்தக வெளியீட்டு விழாவில் அக்ஷதா மூர்த்தி தனது தந்தை நாராயணமூர்த்தி மற்றும் தாய் சுதா மூர்த்தி ஆகியோருடன் கலந்து கொண்டார்.

பெங்களூருவில் உள்ள செயின்ட் ஜோசப் வணிகவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 1970களின் முற்பகுதியில் தனது மனைவி சுதாவுடன் நடந்த முதல் சந்திப்பை மூர்த்தி நினைவு கூர்ந்தார்.

நாராயணமூர்த்தி, சுதா மூர்த்தியுடன் இணைந்து, வெளியீட்டு விழாவில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். அவர்களுடன் மகன் ரோஹன் மூர்த்தி, அக்ஷதா மூர்த்தி மற்றும் அவரது மகள்கள் அனோஷ்கா மற்றும் கிருஷ்ணாவும் இருந்தனர்.

நாராயணமூர்த்தியும் சுதா மூர்த்தியும் எப்படி முதல்முறையாகச் சந்தித்தார்கள் என்ற கதை நிகழ்வில் கூடியிருந்தவர்களைக் கவர்ந்தது.
சுதாவும் நாராயணமூர்த்தியும் 1970களின் தொடக்கத்தில் சந்தித்துக் கொண்டனர்.

புத்தகம் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட சுதாவிடம் தனது நண்பர் ஏராளமான புத்தகங்களை வைத்திருப்பதாக நாராயணமூர்த்தி கூறினார். சுதாவும் மூர்த்தியும் எப்போதும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்ததாக எழுத்தாளர் சித்ரா பானர்ஜி திவாகருணி நினைவு கூர்ந்தார்.

பின்னர் சுதா குல்கர்னியிடம் நாராயணமூர்த்தி அருகில் உள்ள ஒரு உணவகத்தில் தன்னுடன் வந்து சாப்பிடுமாறு அழைத்தார். அதற்குப் பின் நிகழ்ந்தவையெல்லாம் வரலாறு. இதனிடையே, திவாகருணியின் புத்தகம் நாராயணமூர்த்தி மற்றும் சுதா மூர்த்தி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்வதற்கு முன் அவர்களின் உறவை ஆராய்கிறது.

1977 ஆம் ஆண்டில், மூர்த்தி தனது முதல் முயற்சியான சாஃப்ட்ரானிக்ஸ்-ஐ நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தபோது, அவர் புனேவிலிருந்து மும்பைக்கு சில நாட்களுக்கு ஒருமுறை பயணம் செய்தார். அப்போது, அவரும் சுமார் மூன்று வருடங்களாக சுதாவைப் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த ஜோடி 1978 இல் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு நான்கு ஆண்டுகள் டேட்டிங் செய்தது.

Story written by: I.Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+