பெங்களூர் டெக் மாநாட்டில் இன்போசிஸ் இணை நிறுவனர் என் ஆர் நாராயண மூர்த்தி அரசு தரும் இலவசங்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் மானிய விலையில் அரசிடமிருந்து சேவைகளைப் பெற்ற பிறகு சமூகத்திற்குத் திரும்பக் கொடுக்குமாறு மக்களை வலியுறுத்தினார். இது மட்டும் அல்லாமல் தானும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தேன் என்பதால் இலவசங்களின் முக்கியத்துவம் தெரியும் என்றும் பேசியுள்ளார்.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு 2023 கூட்டத்தில் இன்போசிஸ் நாராயண மூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டு பேசினார். சமீபத்தில் இளம் தலைமுறையினர் ஒரு வாரத்திற்கு 70 மணிநேரம் பணியாற்ற வேண்டும் என கூறி பெரும் சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் தற்போது அரசு தரும் இலவசங்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் பேசிய இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரும், இன்போசிஸ் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவருமான நாராயண மூர்த்தி, மக்களுக்கு அரசு தரும் இலவசங்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து இலவசங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவை வளமான நாடாக மாறுவதற்கான இரக்கமுள்ள முதலாளித்துவம் தான் ஒரே தீர்வு என்று கூறிய நாராயண மூர்த்தி, நீங்கள் ஒரு சேவையை இலவசமாக வழங்கும்போதும், பொருட்களையோ அல்லது சேவைகளுக்கு மானியங்கள் வழங்கும்போதும், இதை அனுபவிக்கும் மக்கள் திரும்ப அரசுக்கு உதவ தயாராக இருக்க வேண்டும் என பேசினார்
உதாரணத்திற்கு, இலவச மின்சாரம் தருகிறேன் என்று அரசு சொன்னால், தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் வருகை சதவீதம் 20 ஆக உயர வேண்டும், அப்போதுதான் நாங்கள் அதை உங்களுக்குத் தருவோம் என கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் நாராயண மூர்த்தி கூறினார்.
மேலும் நாராயண மூர்த்தி பேசுகையில் இலவச சேவைகள் வழங்கப்படுவதை நான் எதிர்க்கவில்லை. நானும் ஒரு காலத்தில் ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவன் என்பதை நான் அறிவேன். ஆனால் அந்த இலவச மானியங்களைப் பெற்றவர்களிடம் இருந்து அரசு சற்று பெரிய விஷயத்தை எதிர்பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என தெரிவித்தார்.
இந்த எதிர்பார்ப்பு தங்கள் சொந்த எதிர்கால சந்ததியினரை, தங்கள் சொந்த பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளை, பள்ளிக்குச் செல்வது, சிறப்பாகச் செயல்படுவது அதைத்தான் நான் சொல்கிறேன் என்றும் தனது கருத்து விளக்கம் கொடுத்தார்.
நம் நாட்டில் திறமையான, ஊழலற்ற மற்றும் பயனுள்ள பொதுப் விநியோக சந்தையை உருவாக்க வேண்டுமெனில், வளர்ந்த நாடுகளில் இருக்கும் வரியை விட இந்தியாவில் வரி விதிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications