இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, அவரது மனைவி சுதா மூர்த்தி, மகள் மற்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் பெங்களூருவில் உள்ள ராகவேந்திர மடம் கோவிலுக்கு எவ்விதமான ஆர்ப்பாட்டமும், பாதுகாப்பும் இல்லாமல் மிகவும் எளிமையாகச் சக பொது மக்களுடன் சென்றுள்ளனர்.
மேலும் அக்ஷதா மூர்த்தி, அவரது மகள்கள் அனௌஷ்கா மற்றும் கிருஷ்ணா ஆகியோருடன் நாராயண மூர்த்தி, சுதா மூர்த்தி ஆகியோர் கோவிலுக்குச் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தியின் சுயசரிதை வெளியீட்டு விழாவிற்காக அக்ஷதா மூர்த்தி மற்றும் அவரது குழந்தைகள் கடந்த வாரம் பெங்களூரு வந்திருந்த போது இந்த வீடியோ எடுக்கப்பட்டு இருக்கலாம், ஆனால் பிப்ரவரி 26ஆம் தேதி குரு பிரசாத் என்பவர் இந்த வீடியோ பதிவிட்டது மூலம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவில், நாராயணமூர்த்தி குடும்பத்தினர் அனைவரும் சாதாரண உடைகளில், எவ்விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் மக்களோடு மக்களாகக் கோவிலுக்குச் சென்றும், சாலை ஓரத்தில் இருக்கும் புத்தகக் கடைகளில் புத்தகத்தைப் பார்க்கின்றனர்.
நாராயணமூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்திப் பல்லாயிரம் கோடிக்கு அதிபதி, அக்ஷதா மூர்த்திப் பிரிட்டன் அதிபர் ரிஷி சுனக் மனைவி, First lady of Great Britain ஆயினும் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவுமில்லாமல் சுதந்திரமாக வெளியில் வருவது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளதோடு பெங்களூர் எவ்வளவு பாதுகாப்பான இடம் என்பதையும் கட்டுகிறது.
பொதுவெளியில் மிகவும் எளிமையாக வருவதற்காக இன்போசிஸ் நாராயணமுர்த்தி குடும்பம் பாராட்டப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த வாரம், பெங்களூருவில் உள்ள பிரபலமான ஐஸ்கிரீம் டையில் அக்ஷதா மூர்த்தி மற்றும் நாராயண மூர்த்தி ஆகியோர் புகைப்படம் டிரெண்டிங் ஆனது. அப்போதும் இருவரும் சாதாரண உடைகளில் இருந்த தந்தை-மகள் ஜோடி, கையில் ஐஸ்கிரீம் கப்களுடன் புகைப்படத்திற்குப் போஸ் கொடுத்தனர்.
பிப்ரவரி 10 அன்று, எழுத்தாளர் சித்ரா பானர்ஜி திவாகருணியின் An Uncommon Love: The Early Life of Sudha and Narayana Murthy என்ற தலைப்பில் எழுதிய புத்தக வெளியிடப்பட்டது. இந்தப் புத்தக வெளியிட்டு விழாவில் நாராயணமூர்த்தியின் குடும்பத்தில் அனைவரும் கலந்து கொண்டனர்.
நாராயண மூர்த்தி தனது மனைவி சுதா மூர்த்தியுடன் இந்த வெளியீட்டு விழாவில் பேசுகையில், மகன் ரோஹன் மூர்த்தி, அக்ஷதா மூர்த்தி மற்றும் அவரது மகள்களுடன் கலந்து கொண்டார். இதன் பின்பு தான் நாராயண மூர்த்தி, அக்ஷதா மூர்த்தி பெங்களூர் பொதுவெளியில் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியானது.


Click it and Unblock the Notifications