இன்போசிஸ் நாராயணமூர்த்தி செய்த சேட்டை! ரயிலில், அதுவும் டிக்கெட் இல்லாம.. எல்லாம் லவ்வு..!

இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியும் அவரது மனைவி சுதா மூர்த்தியும் இந்தியாவில் மிகவும் நேசிக்கப்படும் தம்பதியர் ஆவர். இருவருமே தங்களது வாழ்க்கையில் நிகழ்ந்த சுவாரஸ்யங்களைப் பகிர்ந்து கொண்டு ஜோடிகளின் இனிய நினைவுகளை பகிர்ந்துள்ளனர்.

தற்போது ரூ.37,000 கோடிக்கு அதிபதியாக உள்ள நாராயண மூர்த்தி ஒரு முறை தனது மனைவி சுதாவை அவரது ஊரில் விட்டு வருவதற்காக ரயிலில் 11 மணிநேரம் டிக்கெட் இல்லாமல் பயணித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இன்போசிஸ் நாராயணமூர்த்தி செய்த சேட்டை! ரயிலில், அதுவும் டிக்கெட் இல்லாம.. எல்லாம் லவ்வு..!

தனது இளமைக்காலத்தில் மிகவும் துறுதுறுப்பாக இருந்ததாக நாராயண மூர்த்தி ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறியுள்ளார். அப்போது உடனிருந்த அவரது மனைவி சுதா மூர்த்தி இதை மறுக்க முயன்றார். ஆனாலும் விடாமல் தனது நகைச்சுவையைத் தொடர்ந்த நாராயண மூர்த்தி அப்போது தான் காதலில் மூழ்கியிருந்ததாகக் கூறினார்.

அது பற்றி அவர் மேலும் கூறுகையில், அது ஒரு வித்தியாசமான கால கட்டமாகும். நான் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் எனது திருமண வாழ்க்கை பற்றி கூறுகிறேன். அதன் நடுவில் குழந்தைகள் பிறந்தது ஓர் இனிய அனுபவமாகும். எங்களது உறவு சிறப்பாக இருப்பதற்கு இருவரும் கிடைத்த மசாலாக்களையெல்லாம் சேர்த்து இனிமையாக வாழ்ந்து வருகிறோம் என தெரிவித்தார்.

இன்போசிஸ் நாராயணமூர்த்தி செய்த சேட்டை! ரயிலில், அதுவும் டிக்கெட் இல்லாம.. எல்லாம் லவ்வு..!

நாராயண மூர்த்திக்கு இப்போது வயது 77. தனது கடந்த காலத்தில் செய்த தவறு பற்றி குறிப்பிடுகையில் சுதா மூர்த்தியை தனது நிறுவனத்தில் இருந்து விலக்கி வைத்ததற்குக் காரணம் அவருக்கு தன்னையும் தனது பார்ட்னர்களையும் விட சுதாவுக்கு அதிக திறமை இருந்தது தான் காரணம் என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.

சிறந்த கார்ப்பரேட் நிர்வாகம் என்றால் அதில் குடும்பத்தை ஈடுபடுத்தக் கூடாது என்று நினைக்கிறேன். ஏனென்றால் அந்தக் காலத்தில் பிள்ளைகள் வந்து கம்பெனியில் நுழைந்து நிர்வாகம் செய்வார்கள். பல்வேறு விதிகள் இதனால் மீறப்படும் என்று நாராயண மூர்த்தி கூறினார்.

அந்தக் காலத்தில் தான் தவறான ஒரு சித்தாந்தத்தைக் கொண்டிருந்ததாகவும் சிறந்த நிர்வாகத்தைக் கருதி கம்பெனியில் குடும்பத்தை நுழைக்கக் கூடாது என்று நினைத்திருந்ததாகவும் நாராயண மூர்த்தி கூறினார். நாளடைவில் தத்துவப் பேராசிரியர்கள் சிலரிடம் பெற்ற அனுபவத்தின் மூலம் தனது கருத்தை மாற்றிக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

தகுதி படைத்த யாரும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் கம்பெனியில் முறையாக இணைவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று புரிந்து கொண்டதாகவும் கூறினார். அதன்படிதான் தற்போது கம்பெனி நிர்வாகம் செய்யப்படுவதாகவும் நாராயண மூர்த்தி கூறினார். நாராயண மூர்த்தியின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு ரூ.37,000 கோடி ஆகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+