ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை வெடித்த நாளில் இருந்து பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சரான ரிஷி சுனக் முக்கியமான பிரச்சனையைத் தனது மனைவி மூலம் எதிர்கொண்டு வருகிறார்.
ஏற்கனவே பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் ஆகியவை கொரோனா தொற்றுக் காலத்தில் இருந்து கடுமையாகப் பாதித்துள்ள நிலையில் ரஷ்யா - உக்ரைன் போர் மூலம் அந்நாட்டின் பணவீக்கம் அதிகரித்து விலைவாசி தாறுமாறாக அதிகரித்துள்ளது.
அக்ஷதா மூர்த்தி
இந்த முக்கியமான பிரச்சனைகளைச் சரி செய்யப் போராடிக்கொண்டு இருக்கையில் ரிஷி சுனக்-ன் மனைவியும், இன்போசிஸ் நிறுவனர் நாராணயமூர்த்தி-யின் மகளான அக்ஷதா மூர்த்தி-யிடம் இருக்கும் இன்போசிஸ் பங்குகள் குறித்தும், இன்போசிஸ் ரஷ்யாவில் செய்து வரும் வர்த்தகம் குறித்தும், அக்ஷதா மூர்த்தி மூலம் ரிஷி சுனக் லாபம் அடைந்து வருகிறார் என்றும் பல கருத்துக்களை ரிஷி சுனக் மீது வைக்கப்பட்டது.
இங்கிலாந்து ராணி 2வது எலிசபெத்
இந்நிலையில் தற்போது அக்ஷதா மூர்த்தி, இங்கிலாந்து ராணி 2வது எலிசபெத்-விடவும் அதிகப்படியான சொத்துக்களை வைத்துள்ளதாகச் செய்தி வெளியாகி ரிஷி சுனக்-கிற்குப் புதிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
460 மில்லியன் டாலர்
இன்போசிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள நிதி தரவுகள் அடிப்படையில் நராணயமூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தி-யிடம் சுமார் 460 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வைத்துள்ளார். இதன் மூலம் அக்ஷதா மூர்த்தி இங்கிலாந்து ராணி 2வது எலிசபெத்-விடவும் அதிகப்படியான சொத்துக்களை வைத்துள்ளார் என சண்டே டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
டிவிடென்ட், கேப்பிடல் கெயின்ஸ்
இந்த 460 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளுக்கு அக்ஷதா மூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்திடம் இருந்து டிவிடென்ட் தொகை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து கேப்பிடல் கெயின்ஸ் உட்படப் பல வழிகளில் வருமானம் பெற்று வருகிறார்.
குடியுரிமை
சில நாட்களுக்கு முன்பு அக்ஷதா மூர்த்தி இங்கிலாந்து குடியுரிமை நிலையைக் காட்டாத நிலையில், தான் வைத்துள்ள 460 மில்லியன் டாலர் பங்குகளுக்கு இங்கிலாந்தில் எவ்விதமான வரியும் செலுத்தாமல் பல மில்லியன் டாலர் அளவிலான வரியை செலுத்தாமல் சேமித்து வந்தார்.
வரி செலுத்த ஒப்புதல்
இந்தப் பிரச்சனை ரிஷி சுனக்-கிற்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறிய நிலையில், அக்ஷதா மூர்த்தி உடனடியாக உலக நாடுகளில் இருந்து கிடைக்கும் அனைத்து வருமானத்திற்கும் இனி வரி செலுத்துவதாக அறிவித்தார்.
புதிய வரி
இதைத் தொடர்ந்து டிவிட்டரில் தான் பிரிட்டன் வருமானத்திற்குப் பிரிட்டன் வரியும், சர்வதேச வருமான வரிக்குச் சர்வதேச வரியும் செலுத்துவதாகத் தெரிவித்தார். மேலும் புதிய வரி செலுத்தும் முறையைத் தான் ஏற்றுக்கொள்வதாகவும், அது 2021-22ஆம் நிதியாண்டுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்தார். இதன் மூலம் வரி வழக்கின் பிரச்சனை விரைவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications