இந்தியாவின் உயர்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக அகமதாபாத்தில் செயல்படக்கூடிய ஐஐஎம் கல்வி நிறுவனம் பார்க்கப்படுகிறது. இந்த கல்வி நிறுவனத்தில் அண்மையில் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி ஸ்பான்சர் செய்யும் ஒரு ஸ்காலர்ஷிப் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.
இந்த ஸ்காலர்ஷிப் திட்டத்தின் படி ஆண்டுக்கு ஒரு மாணவர் தேர்வு செய்யப்பட்டு அவரின் கல்விச் செலவு முழுவதையுமே நாராயண மூர்த்தி அவர்களே ஏற்றுக்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இந்த ஸ்காலர்ஷிப் திட்டம் குறித்து மணி கண்ட்ரோல் தளத்திற்கு நாராயணமூர்த்தி விரிவான பேட்டியை வழங்கியுள்ளார்.

ஐஐஎம் அகமதாபாத் போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் எம்பிஏ படிப்பதற்கு ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 28 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் ஐஐஎம் அகமதாபாத்தில் எம்பிஏ படிக்கும் ஒரு மாணவரை தேர்வு செய்து அவருக்கான கல்விச் செலவை ஏற்பதற்கான திட்டத்தை கடந்த மாதம் நாராயணமூர்த்தி தொடங்கி வைத்தார். தன்னுடைய இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு முதன் முதலில் ஐஐஎம் அகமதாபாத்தில் தான் சிஸ்டம் இன்ஜினியராக பணி செய்தார் நாராயணமூர்த்தி.
தற்போது ஐஐஎம் அகமதாபாத்தின் வாரிய குழு இயக்குநர்களுள் ஒருவராக செயல்பட்டு வருகிறார். இவர் பணவீக்கம் அடிப்படையில் ஆண்டு தோறும் ஒரு எம்பிஏ மாணவரின் கல்வி செலவை ஏற்கிறேன் என கூறியுள்ளார். மாணவரின் கல்வித்தகுதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு இந்த ஸ்காலர்ஷிப் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
பொதுவாக ஒரு ஸ்காலர்ஷிப் என்றால் ஒரு லட்சம் ரூபாய் வழங்குகிறோம் என்றால் அது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்த ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்படும் . ஆனால் இது பணவீக்கம் அடிப்படையிலான திட்டம் என்பதால் மாணவர்களின் கல்விச் செலவு உயர உயர அதற்கேற்ற மொத்த தொகையும் தன்னுடைய இந்த திட்டம் வழங்கிவிடும் எனக் கூறியிருக்கிறார்.
தற்போது ஐஐஎம் அகமதாபாத்தில் இரண்டு ஆண்டு கால எம்பிஏ படிப்பதற்கு 28 லட்சம் ரூபாய் செலவாகிறது ஆனால் இன்னும் பத்து ஆண்டுகளில் இது 1கோடி ரூபாய் என உயரும் என கூறி இருக்கும் அவர் ஐஐஎம் போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டும் என எண்ணக்கூடிய ஏழை மாணவர்களுக்கு இந்த வாய்ப்புகள் கிடைக்காமலே போய்விடும் என்பதால் தான் தான் இப்படி ஒரு திட்டத்தை கொண்டு வந்திருப்பதாக கூறியிருக்கிறார்.
இந்தியாவில் கிட்டத்தட்ட 400 பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இருக்கின்றன இந்த 400 கார்ப்பரேட் நிறுவனங்களும் ஒவ்வொரு மாணவரின் கல்வி செலவை ஏற்றுக் கொண்டால் பெரும்பாலான மாணவர்கள் இலவசமாக இங்கே பயின்று விட முடியும் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications