மும்பை: இந்தியாவில் இலவசங்களை கொடுப்பதை தவிர்த்து வேலை வாய்ப்பை உருவாக்கினாலே வறுமை ஒழிந்து விடும் என இன்போசிஸ் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தேர்தல் காலங்களில் எல்லாம் பல்வேறு அரசியல் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்கள் குறித்து அறிவிப்புகளை வெளியிடுகின்றன. பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை பார்க்கும் போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசமாக இதையெல்லாம் தருகிறோம் என்று அறிவிப்புகளுக்கு தான் முன்னுரிமை கொடுக்கின்றனர். இவ்வாறு இலவசம் என்ற வார்த்தையை பயன்படுத்தும் போது அவர்களால் எளிதாக வாக்குகளை பெற்று விட முடிகிறது.

இந்தியாவில் இலவசங்களுக்கு சாதகமாகவும் எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி இந்தியாவில் வறுமை ஒழிய வேண்டும் என்றால் இலவசங்களை வழங்கும் கலாச்சாரம் மாறி வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய கலாச்சாரம் கொண்டு வரப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
டைகான் மும்பை 2025 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும் ஐடி நிறுவனங்களின் முன்னோடியுமான இன்போசிஸ் நாராயணமூர்த்தி புதுமையான நிறுவனங்களை நம்மால் உருவாக்க முடிந்தால் வெயில் வந்தவுடன் விலகிச் செல்லும் பனியை போல வறுமை ஒழிந்து விடும் எனக் கூறியுள்ளார். எனக்கு எந்த சந்தேகமும் இல்லை இங்கே இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டவர்கள் இதுதான் நம் நாட்டில் வலிமையை ஒழிக்க உதவும் என தெரிவித்துள்ளார்.
வறுமையை ஒழித்து விட வேண்டும் என இலவசங்களை வழங்கி நம்மால் வறுமையை ஒழித்து விட முடியாது எனக் கூறியுள்ள நாராயணமூர்த்தி, எந்த ஒரு நாடும் இப்படி வெற்றியடைந்தது கிடையாது என விளக்கம் தந்துள்ளார் . இந்தியாவில் தற்போது சுமார் 80 கோடி மக்கள் மாதந்தோறும் பல்வேறு இலவச திட்டங்களுக்கான தொகையை நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் பெறுகின்றனர்.
இதனை அடுத்து பேசிய நாராயணமூர்த்தி எனக்கு அரசியல் பற்றியோ அல்லது ஆளுமை பற்றியோ பெரிய அளவில் தெரியாது. ஆனால் ஒரு நாட்டிற்காக கொள்கைகளை உருவாக்கக்கூடிய பார்வையில் மட்டுமே இலவசங்களை ஒழித்து வேலை வாய்ப்பு உருவாக்கங்கள் என்ற பார்வையை நான் முன் வைக்கிறேன் எனக் கூறியுள்ளார். தற்போது கர்நாடக மாநிலத்தில் ஒரு மாதத்திற்கு 200 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு எந்த கட்டணமும் செலுத்த வேண்டிய தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை குறிப்பிட்டு பேசிய நாராயண மூர்த்தி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு மாநில அரசு ஆய்வு நடத்த வேண்டும் என கூறினார். 200 யூனிட்டுகள் வரை இலவசமாக பயன்படுத்தக்கூடிய வீடுகளில் குழந்தைகள் நீண்ட நேரம் படிக்கிறார்களா அல்லது பெற்றோர் குழந்தைகள் மீது செலுத்தும் கவனம் அதிகரித்து இருக்கிறதா என்பன உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என கூறுகிறார்.
முன்னதாக டெல்லியில் வீடற்ற மக்களுக்கு குடியிருப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இலவசங்கள் குறித்த தனது நிலைபாட்டை தெரிவித்தது. மத்திய மாநில அரசுகள் வழங்கக்கூடிய இலவச பொருட்கள் மற்றும் பிற நேரடி பணப்பலன் திட்டங்கள் காரணமாக பெரும்பாலான மக்கள் வேலைக்கு செல்வதற்கோ சம்பாதிப்பதற்கோ விரும்புவதில்லை என கூறியது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications