இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான ஐஐஎம் அகமதாபாத்தில் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி இரண்டு ஆண்டு கால எம்பிஏ படிப்பை படிக்கும் மாணவர்களுக்கான ஒரு புதிய ஸ்காலர்ஷிப் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார்.
பேராசிரியர் ஜஸ்வந்த் ஜி கிருஷ்ணய்யா மெரிட் ஸ்காலர்ஷிப் என்ற பெயரில் இந்த திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன்படி ஐஐஎம் அகமதாபாத்தில் இரண்டு ஆண்டுகால எம்பிஏ படிப்பை படிக்கும் மாணவர்களில் சிறந்த மாணவர் தேர்வு செய்யப்பட்டு அவருக்கான அனைத்து செலவுகளும் ஸ்காலர்ஷிப் மூலமே வழங்கப்படும் . கல்வி கட்டணம், தங்கி விடுதிக்கான செலவுகள், புத்தகங்கள் என அனைத்து செலவுகளையும் இந்த ஸ்காலர்ஷிப் திட்டமே கவனித்துக் கொள்ளும்.

இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வேண்டிய தேவை இல்லையாம். வழக்கமாக ஐஐஎம் அகமதாபாத்தில் இரண்டு ஆண்டு கால எம்பிஏ படிப்பவர்கள் 36 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும் அந்த செலவு முழுவதும் இந்த ஸ்காலர்ஷிப் திட்டம் மூலமே மேற்கொள்ளப்பட இருக்கிறது. இன்போசிஸ் நாராயணமூர்த்தி இந்த ஸ்காலர்ஷிப் நிதியை வழங்குகிறார். அவரும் ஐஐஎம் அகமதாபாத் கல்வி நிறுவனமும் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கிறது. அடுத்த 20 ஆண்டு காலத்திற்கு இந்த ஸ்காலர்ஷிப் திட்டம் அமலில் இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
முழுக்க முழுக்க மாணவரின் கல்வி திறமையை அடிப்படையாக கொண்டே ஸ்காலர்ஷிப்பிற்கு தேர்வு செய்யப்படுவார் என்றும் அவரின் குடும்ப பின்னணி வருமானம் ஆகியவை கணக்கில் கொள்ளபடாது என்றும் ஐஐஎம் அகமதாபாத் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்காக நாராயணமூர்த்தி தன்னுடைய குடும்ப நிறுவனத்தின் மூலம் 12 கோடி ரூபாய் நிதியை வழங்கி இருக்கிறார்.
இந்தியாவில் தற்போது இருக்கக்கூடிய ஸ்காலர்ஷிப் திட்டங்களில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது. பணவீக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி கட்டணம் எவ்வளவு உயர்கிறதோ அந்தத் தொகையை நாராயணமூர்த்தி தொடங்கி இருக்கக்கூடிய இந்த ஸ்காலர்ஷிப் திட்டம் செலுத்திவிடும். எனவே கல்வி கட்டணம் உயர்கிறதே என மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை.
இந்தியாவிலேயே காஸ்ட்லியான ஒரு படிப்பாக ஐஐஎம் அகமதாபாத்தின் 2 ஆண்டுகால எம்பிஏ படிப்பு பார்க்கப்படுகிறது. இதற்கு சராசரியாக 35 லிருந்து 36 லட்சம் ரூபாய் வரை செலவாகும் .இதுவே பெங்களூரு, கொல்கத்தா ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் 26 முதல் 34 லட்சம் ரூபாய் வரை இதே படிப்பிற்கு செலவாகிறது. புதிதாக தொடங்கப்பட்ட ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் 20 லட்சம் ரூபாய்க்கு உள்ளே இந்த இரண்டு ஆண்டுக்கான எம்பிஏ படிப்பை முடித்துவிட முடியும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications