இந்தியாவில் பல லட்சம் இளைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்திய ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் மனைவி சுதா மூர்த்தி ஆகியோரின் சொந்த முதலீட்டு நிறுவனமான Catamaran 915 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டியுள்ளது. அதுவும் ஓரே நிறுவனத்தில் இருந்து.
நீங்கள் அமேசான், பிளிப்கார்ட் தளத்தில் ஷாப்பிங் செய்திருந்தால் Cloudtail என்ற செல்லர் பெயர் உங்கள் கண்ணில் பட்டிருக்கும். இது நாராயண மூர்த்தி-யின் Catamaran மற்றும் அமெரிக்கா நிறுவனம் அமேசான் இணைந்து உருவாக்கிய ஒரு கூட்டணி நிறுவனம்.

ஈ-காமர்ஸ் விற்பனையாளரான க்ளவுட்டெயில் நிறுவனத்தில் நாராயண மூர்த்தி மற்றும் மனைவி சுதா மூர்த்தி ஆகியோர் தங்கள் பங்குகளை விற்க முடிவெடுத்த நிலையில் தற்போதும் பெரும் தொகையை லாபமாகப் பெற்றுள்ளனர்,
நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தி ஆகியோர் க்ளவுட்டெயில் நிறுவனத்திற்காக மொத்த 417 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்தனர். தற்போது கேடமரன் நிறுவனத்திடம் இருந்த சுமார் 76 சதவீத பங்குகளை 1,332 கோடி ரூபாய்க்கு ($160 மில்லியன்) விற்றதன் மூலம் 915 கோடி ரூபாய் லாபத்தை பெற்றுள்ளனர், எட்டு வருட முதலீட்டில் 3X வருமானம் கிடைத்தது.
கிளவுட் டெயில் நிறுவனத்தில் கேடமரன் நிறுவனம் தனது பங்குகளை ஹோபர் மல்லோ டிரஸ்ட் மூலமாக நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தி வைத்திருந்திருந்தனர். இந்த முதலீட்டில் சுதா மூர்த்தி 80 சதவீத பங்குகளை வைத்திருந்தார், மீதமுள்ள பங்குகளை நாராயண மூர்த்தி வைத்திருந்தார்.
இன்ஃபோசிஸ் முதலீட்டில் உருவான கிளவுட்டெயில் அபரிமிதமான வளர்ச்சியைக் காட்டியது, விரைவில் அமேசானின் மிகப்பெரிய வியாபாரியாக மாறியது, அமேசானின் ஒட்டுமொத்த விற்பனையில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக கிளவுட்டெயில் மட்டுமே பங்கு வகித்தது.
அதாவது சொந்த ஈகாமர்ஸ் தளத்தில், சொந்த நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்யும் பணியைத் தான் அமேசான் மற்றும் நாராயண மூர்த்தி Cloudtail நிறுவனத்தின் வாயிலாக செய்தது. இது இந்திய இ-காமர்ஸ் வர்த்தக விதிமுறைகள் அமேசான் மீறியது.
இதன் வாயிலாக அமேசான் அதன் பங்குகளை குறைக்க வழிவகுத்தது, வெறும் 24 சதவீதத்தை வைத்திருந்தது மற்றும் மீதமுள்ள பங்குகளை கேடமரனுக்கு விற்றது. விரைவில், விற்பனை மற்றும் லாபத்தில் கடுமையான சரிவுக்குப் பிறகு, 2022 இல் செல்லராக செயல்படுவதை நிறுத்துவதாக Cloudtail அறிவித்தது.
மார்ச் 2022 இல் Cloudtail அதன் உச்சபட்ச விற்பனையில் 19,000 கோடி ரூபாயை தொட்டது, ஆனால் ஒரு வருடத்திற்குப் பிறகு மார்ச் 2023 இல் விற்பனை 3,100 கோடி ரூபாயாக குறைந்ததால் லாபம் வெகுவாகக் குறைந்தது. தற்போது கிளவுட்டெயிலில் இருந்து நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தியும் விலகியுள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications