இந்திய ஐடி துறையின் வளர்ச்சிக்கு வித்திட்ட இன்போசிஸ் நாராயணமூர்த்தி தனது வாழ்வின் வெற்றிக்கு முக்கிய துணையாக இருந்த தனது மனைவி குறித்தும், பெற்றோர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது குறித்தும் பேசிய வீடியோ தற்போது சமுக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது. இன்று டெக் ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கும் அனைவருக்கும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி முக்கிய இன்ஸ்பிரேஷனாக இருப்பவர்.
ஜூலை மாத துவக்கத்தில் ஸ்டார்ட்அப் குறித்த வர்த்தக நிகழ்ச்சியில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி-யிடம் அவரின் மகன் ரோஹன் மூர்த்தி, எப்படி நீங்க பெயர் தெரியாத நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு, நிறுவனத்தை துவங்க முடிவு செய்தீர்கள். உங்களுடை குடும்பம் எந்த கேள்வியும் கேட்டவில்லையா..? என கேட்டார்.

இதற்கு பதில் அளித்த இன்போசிஸ் நாராயணமூர்த்தி என்னுடைய குழந்தை பருவத்தில் எனக்கு அதிகப்படியான சுதந்திரம் இருந்தது, காரணம் என்னுடைய பெற்றோர் நாள் முழுக்க பிசியாகவே இருப்பார்கள். என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் 8 பேர், என்னுடைய தாய் நாள் முழுக்க சமையல் அறையிலேயே தான் இருப்பார் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையில் எங்களுக்காக சமைத்துக்கொண்டே இருப்பார்.
என்னுடைய தந்தை செய்து வந்த அரசு வேலையில் மிகவும் சீரியஸாக பணியாற்றினார், இதனால் காலை 8 முதல் இரவு 8 வரையில் பணியாற்றினார். இதனால் எங்களுக்கு அதிகப்படியான சுதந்திரம் கிடைத்தது, என்னுடைய தந்தை என்ன படிக்கிறாய், சாப்பிட்டாயா..? என்ன வேலை செய்ய போகிறாய் என்பது போன்ற கேள்வி எல்லாம் கேட்கமாட்டார்.
இதேபோல் பணியில் சேர்ந்த பின்பு என் மனதில் இருப்பதை முழுமையாக பகிரவும், வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் என்னுடைய மனைவி இருந்தார். இன்போசிஸ் துவங்குவதற்காக என்னுடைய பணியை ராஜினாமா செய்துவிட்டேன். இதை சுதா மூர்த்தி பிறந்த நாளில் செய்தேன்.
அவளுடைய பிறந்த நாளன்று அவளை நேரில் சந்தித்து ஹேப்பி பர்த்டே கூறிவிட்டு, என்னுடைய பணியை ராஜினாமா செய்துவிட்டேன் என தெரிவித்தேன். எப்போதும் போலவே சிரித்துக்கொண்டே எந்த பிரச்சனையும் இல்லை நம்மிடம் இருப்பதை வைத்து வாழ்வோம், என்னுடைய முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறேன், கட்டாயம் நீங்கள் வெற்றிபெறுவீர்கள் என அடுத்த நொடியே கூறினாள் சுதா மூர்த்தி என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இத்தகைய கட்டமைப்பில் நாள் வளர்ந்த காரணத்தால் எந்த நபரின் கருத்துக்களையும் நான் கேட்டது கிடையாது. நான் மனம்திறந்து பேசக்கூடிய ஒரே நபர் சுதா மூர்த்தி மட்டுமே, இதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.
நாராயண மூர்த்தி தனது மனைவி சுதா மூர்த்தி-யிடம் இருந்து 10000 ரூபாய் கடன் வாங்கி இன்போசிஸ் நிறுவனத்தைத் துவங்கினார். இந்நிறுவனம் துவங்கி 2 வருடங்கள் கம்பியூட்டர் இல்லாமல் தான் இயங்கி வந்தது என்பது தான் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. கம்பியூட்டர் கூட வாங்குவதற்குப் பணம் இல்லாத நிலையில் தான் இன்போசிஸ் துவங்கப்பட்டது.
நாராயண மூர்த்தி இன்போசிஸ் துவங்குவதற்கு முன்பு 1976 ஆம் ஆண்டில் softronics என்னும் நிறுவனத்தைத் துவங்கினார். இந்த நிறுவனம் 1.5 வருடம் கூடத் தாக்குப்பிடிக்க முடியாமல் மூடப்பட்டது. இதன் பின்பு தான் தனது 7 நண்பர்கள் உடன் இணைந்து 10000 ரூபாய் பணத்துடன் இன்போசிஸ் துவங்கப்பட்டது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications