ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?

இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், பில்லியனருமான என்.ஆர். நாராயண மூர்த்தி, தனது பேரனுக்கு கடந்த மாதம் 15 லட்சம் இன்போசிஸ் பங்குகளை பரிசாக வழங்கினார். இதன் மூலம் ஐந்து மாதக் குழந்தை ஒரே நாளில் பல கோடிகளை சம்பாதித்துள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகளுக்கு அறிவிக்கப்பட்ட டிவிடென்ட் மூலம் ஐந்து மாதக் குழந்தை ஒரே நாளில் பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது. இந்த ஒரு விஷயம் இன்று நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

 ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?

இன்போசிஸ் நாராயண மூர்த்தி-யின் மகன் ரோஹன் மூர்த்தி மற்றும் மருமகள் அபர்ணா கிருஷ்ணன் தம்பதியினருக்குப் பிறந்த மகன் எக்கிரஹா ரோஹன் மூர்த்தி தற்போது 15 லட்சம் இன்போசிஸ் பங்குகளை வைத்திருக்கிறார். இதன் பங்குச் சந்தை மதிப்பு ரூ.210 கோடி.

இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் வியாழக்கிழமை தனது காலாண்டு முடிவுகளை வெயிட்ட நிலையில், முதலீட்டாளர்களை தக்க வைத்துக்கொள்ள, 2024 நிதியாண்டுக்கான இறுதி ஈவுத்தொகையாக ஒரு பங்குக்கு ரூ.20 மற்றும் சிறப்பு ஈவுத்தொகையாக (special dividend) 8 ரூபாய் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த ஒரு அறிவிப்பு மூலம் இன்போசிஸ் பங்குகள் வைத்திருக்கும் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இப்படி இன்போசிஸ் நிறுவனர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் பெரும் தொகையை இந்த டிவிடென்ட் மூலம் சம்பாதிக்க உள்ளனர்.

எக்கிரஹா ரோஹன் மூர்த்தி வைத்திருக்கும் பங்குகளுக்கு ஈவுத்தொகை கணக்கிடப்பட்டால் சுமார் ரூ.4.2 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.

இன்போசிஸ் நிறுவனர்கள் மத்தியில் அதிகப்படியான பங்குகளை வைத்திருப்பது நாராயணமூர்த்தியின் குடும்பம் தான். இக்குடும்பத்தில் இருக்கும் அனைவருமே இன்போசிஸ் பங்குகளை வைத்திருக்கும் நிலையில் இக்குடும்பத்தின் குட்டி இளவரசனுக்கும் இந்த டிவிடெண்ட் மூலம் ஜாக்பாட் அடித்துள்ளது.

நாராயணமூர்த்தி, அவரின் மனைவி சுதா மூர்த்தி, மகன் ரோஹன் மூர்த்தி, மகள் அக்ஷதா மூர்த்தி, பேரன் எக்கிரஹா ரோஹன் மூர்த்தி ஆகிய அனைவரும் இன்போசிஸ் பங்குகளை வைத்துள்ளனர்.

 ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?

ரோஹன் மூர்த்தி ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள சொரோகோ (Soroco) என்ற மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார். எக்கிரஹா ரோஹன் மூர்த்தியின் தாயார் அபர்ணா கிருஷ்ணன், இவர் மூர்த்தி மீடியா என்ற நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.

இதேவேளையில் இன்போசிஸின் பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் 3% வரை சரிந்து ரூ.1,379.70 ஆக இருந்தது. இந்த சரிவுக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது இந்நிறுவனத்தின் நிலையான நாணய வருவாய் டிசம்பர் காலாண்டை காட்டிலும் மார்ச் காலாண்டில் 2.2% சரிவை பதிவு செய்துள்ளது.

இன்போசிஸ் நிறுவனம் மார்ச் காலாண்டில் 7,969 கோடி ரூபாய் லாபத்தை பதிவு செய்து கடந்த ஆண்டை காட்டிலும் 30 சதவீத வருடாந்திர உயர்வை பதிவு செய்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் வருவாய் ரூ.37,923 கோடியாக உடன் 1 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+