இந்தியாவில் ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் முன்னணி கல்வி நிறுவனங்களாக செயல்படுகின்றன. இவை நிதிக்காக அரசை மட்டுமே சார்ந்திருப்பது தான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. பல்கலைகழகங்களில் புதிய திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றால் அரசின் நிதியை எதிர்பார்த்திருக்க வேண்டும்.
நன்கொடை விதிமுறை:இந்தியாவில் இருக்கக்கூடிய கல்வி நிறுவனங்களுக்கு ஒரு நிறுவனமோ அல்லது ஒரு நபரோ நன்கொடை வழங்க வேண்டும் என்றால் ரொக்கமாக தான் வழங்க முடியும் , இது காலம் கடந்த நடைமுறை என கூறிவரும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி, அரசு இந்த ஒரு விதியை மாற்றினால் இந்தியாவின் கல்வி நிறுவனங்கள் அனைத்துமே செல்வ வளம் மிக்க கல்வி நிறுவனங்களாக மாறும் இதன் மூலம் இன்னும் தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியும் என தொடர்ந்து கூறி வருகிறார் .

ஈக்விட்டி பங்குகளை வழங்க முடியாது: கல்வி நிறுவனங்களுக்கு ஈக்விட்டி பங்குகளை நன்கொடையாக வழங்குவதற்கு அனுமதி தர வேண்டும் என நீண்ட காலமாக அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறார் நாராயணமூர்த்தி. இன்போசிஸ் நிறுவனத்தின் அறிவியல் அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நாராயணமூர்த்தி இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார் . குறிப்பாக நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் பங்குகளை நன்கொடையாக வழங்குவதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ரூ.4.5 கோடி இன்று ரூ.300 கோடி ஆகி இருக்கும்: இந்த நவீன காலத்தில் கூட இந்தியாவில் கல்வி நிறுவனங்களுக்கு நம்மால் பங்குகளை நன்கொடையாக வழங்க முடியாமல் இருப்பது தவறு எனக் குறிப்பிட்டு இருக்கும் அவர் 1995ஆம் ஆண்டு என்னுடைய மனைவி சுதா மூர்த்தி பெங்களூரு ஐஐஎஸ்சி கல்வி நிறுவனத்திற்கு 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள இன்போசிஸ் நிறுவன பங்குகளை நன்கொடையாக வழங்குவதற்கு தயாராக இருந்தார் அந்த சமயம் அரசின் இந்த ஒரு விதிமுறை காரணமாக பெங்களூர் ஐஐஎஸ்சி நிறுவனம் அந்த நன்கொடையை ஏற்க மறுத்துவிட்டது. அவர்கள் அப்பொழுது அந்த பங்குகளை நன்கொடையாக பெற்று இருந்தால் அந்த 4.5 கோடி ரூபாய் என்பது தற்போது 300 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கும் என தெரிவித்திருக்கிறார்.
ஈவு தொகையே பல கோடி: அதாவது 1995 லிருந்து 2025 வரையிலான 30 வருட காலத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 768 மடங்கு உயர்ந்திருக்கிறது. இந்த கல்வி நிறுவனங்கள் இந்த பங்குகளை வைத்திருப்பதன் மூலம் ஆண்டுதோறும் ஈவு தொகையாக மட்டுமே பல நூறு கோடி ரூபாயை பெற்றிருக்கும் என அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

8 கோடி இன்னைக்கு 2000 கோடி: இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மனைவியான சுதா மூர்த்தி ஐஐஎஸ்சி கல்லூரியின் முன்னாள் மாணவி என்பதால் அவர் நன்கொடையாக பணத்துக்கு பதில் பங்குகளை வழங்க முன் வந்தார். முன்னதாக மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய நாராயணமூர்த்தி தான் படிப்பை முடித்து முதன்முதலில் வேலை செய்த கல்வி நிறுவனம் ஐஐடி கான்பூர் என்றும் இந்த ஐஐடி கான்பூருக்கு நான் 8 கோடி ரூபாய் மதிப்பிலான இன்போசிஸ் பங்குகளை நன்கொடையாக வழங்க முன்வந்தேன். ஆனல் அவர்கள் அந்த நன்கொடையை ஏற்க மறுத்துவிட்டனர் என கூறியுள்ளார்.
ரூ.2,000 கோடி இழப்பு: அப்பொழுது அந்த நன்கொடையை அவர்கள் ஏற்றிருந்தார்கள் என்றால் அது 256 மடங்கு வளர்ந்து தற்போது அதன் மதிப்பு 2000 கோடி ரூபாயாக இருக்கும், இது மட்டும் இன்றி கடந்த எட்டு ஆண்டுகளில் இந்த நிறுவனம் 500 கோடி ரூபாயை ஈவுத்தொகையாக பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளார். பழமையான ஒரு விதிமுறை நடைமுறையில் இருப்பதால் இந்திய கல்வி நிறுவனங்கள் நிதிக்காக அரசை மட்டுமே எதிர்பார்த்திருக்கக்கூடிய சூழல் இருக்கிறது, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த சூழலில் இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரமிக்க வைக்கும் வளர்ச்சி: 1993 ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனம் இந்திய பங்குச் சந்தையில் ஐபிஓ வெளியீடு செய்து பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாறியது. 1993ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 0.76 ரூபாயாக மட்டுமே இருந்தது. பின்னர் படிப்படியாக வளர்ந்து இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2005 ஆம் ஆண்டின் 100 ரூபாய் என்ற மதிப்பை கடந்தது, 2020 ஆம் ஆண்டில் ஆயிரம் ரூபாய் என்ற மதிப்பை கடந்தது.ஜூன் 19ஆம் தேதி இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 1621 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. 2025 ஆம் நிதி ஆண்டில் இன்போசிஸ் நிறுவனம் ஒரு பங்கிற்கு 22 ரூபாய் என ஈவுத்தொகை வழங்கியுள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications