ராஜியசபா உறுப்பினர் சுதா மூர்த்தி முகத்தில் எவ்வளவு சிரிப்பு பாருங்க! Infosys நாராயண மூர்த்தி ஹேப்பி

பொறியியல் பட்டதாரியும் அறக்கொடையாளருமான சுதா மூர்த்தி வியாழக்கிழமையன்று மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார். இவர் இன்போசிஸ் இணை நிறுவனர் நாரயண மூர்த்தி-யின் மனைவி ஆவார்.

மக்களவைத் தலைவர் ஜக்தீப் தான்கர் நாடாளுமன்றத்தில் தனது சேம்பரில் சுதாவுக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அப்போது பியூஷ் கோயல் உடன் இருந்தார்.

ராஜியசபா உறுப்பினர் சுதா மூர்த்தி முகத்தில் எவ்வளவு சிரிப்பு பாருங்க! Infosys நாராயண மூர்த்தி ஹேப்பி

இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் முன்னாள் தலைவரும், பெரும்பாலும் குழந்தைகளுக்கான பல புத்தகங்களை எழுதியவருமான சுதா மூர்த்தி, 73, கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச மகளிர் தினத்தன்று மாநிலங்களவைக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

அவர் கன்னடம் மற்றும் ஆங்கில இலக்கியத்துக்கான தனது பங்களிப்புக்காக புகழ்பெற்றவர். சாகித்ய அகாடமி பால் சாகித்ய புரஸ்கார், பத்மஸ்ரீ (2006) மற்றும் பத்ம பூஷன் (2023) ஆகிய விருதுகளைப் பெற்றவர்.

ராஜியசபா உறுப்பினர் சுதா மூர்த்தி முகத்தில் எவ்வளவு சிரிப்பு பாருங்க! Infosys நாராயண மூர்த்தி ஹேப்பி

டெல்கோவில் பணிபுரிந்த முதல் பெண் இன்ஜினியர் சுதா மூர்த்தி. தற்போது 80 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ள இன்போசிஸ் நிறுவனத்தைத் தொடங்க தனது கணவருக்கு தனது அவசர நிதியிலிருந்து 10,000 ரூபாயை மூலதனமாக வழங்கினார். இவரது மகள் அக்ஷதா பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கை மணந்துள்ளார்.

சுதா மூர்த்தி தனது கல்லூரிக் காலத்தில் டாடாவின் டிஸ்கோ நிறுவனம் இளம் இன்ஜினியருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் இந்த வேலைக்குப் பெண்கள் விண்ணப்பிக்க வேண்டாம். அவர்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் எனக் குறிப்பிட்டிருந்தது.

ராஜியசபா உறுப்பினர் சுதா மூர்த்தி முகத்தில் எவ்வளவு சிரிப்பு பாருங்க! Infosys நாராயண மூர்த்தி ஹேப்பி

இந்த செய்திக் குறிப்பைப் படித்த சுதா மூர்த்தி பயங்கர கோபம் அடைந்தார். இதையடுத்து டாடா நிறுவனத் தலைவர் ரத்தன் டாடாவுக்கு அவர் ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் டாடா நிறுவனம் பாலின வேறுபாடுகளைப் பார்ப்பது மிகப் பெரிய தவறு. அதை திருத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தக் கடிதத்தைப் படித்த ரத்தன் டாடா உடனடியாக தனது நிறுவனத்துக்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். அதில் தனது நிறுவனத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம வாய்ப்பைத் தரவேண்டும் எனக் கூறியிருந்தார்.

ராஜியசபா உறுப்பினர் சுதா மூர்த்தி முகத்தில் எவ்வளவு சிரிப்பு பாருங்க! Infosys நாராயண மூர்த்தி ஹேப்பி

இதைத் தொடர்ந்து சுதா மூர்த்தியை இண்டர்வியூவுக்கு டாடா நிறுவனம் அழைப்பு கடிதம் அனுப்பியது. இண்டர்வியூவில் சுதா மூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டு டாடா நிறுவனத்தின் முதல் பெண் இன்ஜினியர் என்ற பெருமையைப் பெற்றார். டாடா நிறுவனத்தில் அவர் ஆறு வருடம் வேலை பார்த்தார். பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு இன்போசிஸ் நிறுவனத்தில் சேர்ந்தார்.

Story Written by: I.Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+