ஐடி துறையினை சேர்ந்த முன்னணி நிறுவனமான இன்ஃபோசிஸ், அதன் ஜனவரி - மார்ச் வரையிலான நான்காவது காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
பெங்களுருவினை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் நிகரலாபம் மார்ச் காலாண்டில் 17.47% அதிகரித்து, 5,076 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 4,321 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் கடந்த காலாண்டினை காட்டிலும் இந்த லாப விகிதம் 2.32% வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது.
பங்கு விலை
கடந்த டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 5,197 கோடி ரூபாயாகும். இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது முந்தைய அமர்வில், பிஎஸ்இயில் 1.91% சரிந்து 1398.60 ரூபாயாகவும், இதே என் எஸ் இ-யில் 2.01% குறைந்து 1397.15 ரூபாயாகவும் சரிந்துள்ளது. இன்று சந்தை விடுமுறை என்பதால், இதன் தாக்கம் நாளை சந்தையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருவாய் எவ்வளவு?
இதன் வருவாய் 26,311 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 13.08% அதிகம் என்று தெரிவித்துள்ளது. இதே கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது, 1.5% அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் வருவாய் 23,267 கோடி ரூபாயாகவும், இதே கடந்த காலாண்டில் 25,927 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.
துறை வாரியாக வருவாய்
இன்ஃபோசிஸ் நிறுவனம் நிதி சேவை மூலம் 33% வருவாயினையும், இதே சில்லறை வர்த்தக சேவை மூலம் 14.8%மும், கம்யூனிகேஷன் மூலம் 12%மும், எனர்ஜி, பயன்பாடு மூலம் 12.3%மும், உற்பத்தி மூலம் 9.6%மும், ஹை டெக் மூலம் 8.15மும், லைஃப் சயின்ஸ் மூலம் 6.8%மும், மற்ற ஆப்சன் மூலம் 3.4% வருவாயும் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
பங்கு பைபேக் திட்டம்
இதற்கிடையில் இன்ஃபோசிஸ் நிர்வாகம் 9,200 கோடி ரூபாய் வரையிலான பங்குகளை திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது ஒரு பங்கின் விலையானது 1750 ரூபாயில் பெற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
அதோடு 2021ம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய், 1 லட்சம் கோடி ரூபாயினை தாண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் மொத்த ஒப்பந்த மதிப்பு 66% அதிகரித்து, 14.1 பில்லியன் டாலர் மதிப்பில் அதிகரித்துள்ளதுதாக தெரிவித்துள்ளது. இயக்க மார்ஜின் தொகையும் 3.2% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட்
அதுமட்டும் அல்ல, கடந்த நிதியாண்டிற்கு ஒரு பங்கிற்கு 15 ரூபாய் டிவிடெண்டும் அறிவித்துள்ளது. ஏற்கனவே இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 12 ரூபாய் இன்ஃபோசிஸ் நிறுவனம் கொடுத்துள்ளது. ஆக மொத்தத்தில் 2021ம் நிதியாண்டிற்காக மொத்த டிவிடெண்டு 27 ரூபாயாகும்.


Click it and Unblock the Notifications