ஒரு நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் செல்ல அதில் பணிபுரியும் பணியாளர்களின் செயல் மற்றும் பணி சார்ந்த அறிவு திறனும் காலத்துக்கு தகுந்த மாதிரி அதிகரிக்க வேண்டும். இதனை உணர்ந்து பல நிறுவனங்கள் பணியாளர்களின் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
நாட்டின் இரண்டாவது பெரிய ஐ.டி. நிறுவனமான இன்போசிஸ், பணியாளர்களின் ரீஸ்கில்லிங்-ஐ மேம்படுத்தும் நோக்கில் புதிய மேம்பாட்டு மையத்தை தொடங்கியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள மிஹான் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இன்போசிஸ் நிறுவனம் சில தினங்களுக்கு முன் புதிய டெவலப்மென்ட் சென்டரை திறந்துள்ளது. இன்போசிஸ் 2,65,000 சதுர அடி பரப்பளவில் ரூ.230 கோடி முதலீட்டில் இந்த புதிய மையத்தை திறந்துள்ளது.
இந்த புதிய மைய திறப்பு விழாவில் மத்திய அமைச்சர், மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் இன்போசிஸின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மையம் ஒரு ஹைபிரிட் வேலை மாதிரி வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் பணியாளர்களின் திறமைகளின மறுதிறன் மற்றும் திறன்களை மேம்படுத்த உதவும்.
இன்போசிஸ் நிறுவனத்தின் சுற்றுச்சூழல்,சமூக மற்றும் நிர்வாக உறுதிபாடுகள் மற்றும் பசுமை கட்டிட தரங்களுக்கு இணங்க, பணியாளர்களின் ஆரோக்கியம் மற்றும் செயல்திறன் மற்றும் நிலையான நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளித்து இந்த மையம் கட்டப்பட்டுள்ளது என இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மையத்தில் நீர், எனர்ஜி போன்ற இயற்கை வள நுகர்வை குறைக்க புதுமையான அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. குறைந்த எனர்ஜி கொண்ட குளர்ச்சி, ஸ்மார்ட் பில்டிங் ஆட்டோமேஷன்,திறமையான மழைநீர் சேகரிப்பு மற்றும் கழிவுநீரை 100 சதவீதம் மறுசுழற்சி செய்தல் ஆகியவை இந்த கட்டிடத்தில் இடம் பெற்றுள்ளன.
3,000 பணியாளர்களை உள்ளடக்கிய இந்த மேம்பாட்டு மையம், இன்போஸின் எதிர்கால ஹைபிரிட் பணியுடன் ஒத்துபோகிறது. இந்த மேம்பாட்டு மையம், தொலைத்தொடர்பு, வங்கி, சில்லரை விற்பனை, விண்வெளி, ஆட்டோமொபைல், தளவாடங்கள் மற்றும் உற்பத்தி போன்ற தொழில்களில் கிளவுட், ஏ.ஐ., மற்றும் டிஜிட்டல் போன்ற அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் பணிபுரியும் வாய்ப்பையும் பணியாளர்களுக்கு வழங்கும் என்று இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் நிலஞ்சன் ராய் கூறுகையில், இந்த மேம்பாட்டு மையத்தின் திறப்பு விழா, தொடர்ச்சியான கண்டுபிடிப்புகளுக்கான எங்கள் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும். இந்த மையம் வணிகங்களின் வளர்ச்சிக்கும்,நேரடி மற்றும் மறைமுகமாக வேலை வாய்ப்புகளையும் உருவாக்குவதற்கும், நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கும் பங்களிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மையத்தின் அதிநவீன தீர்வுகள் மற்றும் சேவைகள் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச வணிகங்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்று தெரிவித்தார்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications