இந்தியாவின் 254 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐடி சேவை துறை சமீபமாக பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் வேளையில், பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இன்போசிஸ் நிர்வாகம் பெரும் சரிவில் இருந்து மீண்டு வரும் நோக்கில் முக்கியமான முடிவை எடுத்துள்ளது. மேலும் மாறிவரும் தொழில்நுட்ப சந்தைக்கு இணையான திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
இன்போசிஸ் ஜூன் காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் வேளையில், இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக் உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து வெளியேறும் நிலைக்கு மத்தியில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக் நிறுவனத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சியில் புதிய தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும் வேளையில், இன்போசிஸ் நிர்வாகம் கிளவுட், ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்ப திட்டங்களை AGILE முறையில் கையாண்டு புதிய வர்த்தக வாய்ப்பை தேடுவதில் மிகவும் ஆர்வமாக உள்ளது என தெரிவித்துள்ளது.
கடந்த 5 வருடத்தில் இன்போசிஸ் நிர்வாகம் டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகளை ஈர்ப்பதில் அதிகப்படியான திட்டத்தை ஈர்த்து நிர்வாகம் செய்து லாபம் அடையும் நிலைக்கு முன்னேறி இப்பிரிவில் மிகவும் வலிமையாக உள்ளது. இது மட்டும் அல்லாமல் டிஜிட்டல் தொழில்நுட்ப சேவை பிரிவு வர்த்தகம் இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கீட்டை கொண்டு உள்ளது.
இதேபோன்ற வலிமையான வளர்ச்சி பாதையை கிளவுட், டேட்டா, சைபர் செக்யூரிட்டி போன்ற புதிய தொழில்நுட்ப துறையிலும் பெறும், இத்துறையில் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதை நாங்கள் பார்க்கிறோம் எனவும் இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக் தெரிவித்துள்ளார்.
இதன் முதல் படியாக நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளும் AI-first என்ற பார்வையை முன்வைத்து பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் ஒட்டுமொத்த நிறுவனமும் AI சார்ந்து இயங்க துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக் பேச்சின் மூலம் தெரிய வருவது இந்நிறுவனத்தில் அடுத்த சில மாதங்களில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட உள்ளது, இந்த மாற்றத்திற்கு அனைத்து இன்போசிஸ் ஊழியர்களும் தயாராக இருக்க வேண்டும். இது பல ஊழியர்களுக்கு பிரச்சனையாகவும் மாறலாம், எனவே அனைத்திற்கும் தயாராக இருங்க...!!!


Click it and Unblock the Notifications