இன்ஃபோசிஸ் நிறுவனம் நேற்று தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது, டிசம்பர் காலாண்டில் சிறப்பான லாபத்தையும், வருவாயும் பதிவு செய்தாலும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களை ஈர்க்க தவறியுள்ளது. இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) இன்போடிஸ் பங்கு விலை கடந்த கடுமையாக சரிவடைந்தது.
இதனால் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் குடும்பமான நாராயணமுர்த்தி குடும்பத்தின் சொத்து மதிப்பு பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் பங்கு விலை கிட்டத்தட்ட 6% சரிந்து ரூ.1,812.70 க்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த வீழ்ச்சியின் காரணமாக நாராயணமுர்த்தி குடும்பத்திற்கு சுமார் ரூ.1,900 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

நாராயணமுர்த்தி தி குடும்பம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மொத்தம் 4.02% பங்குகளை வைத்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரா என்.ஆர். நாராயண முர்த்தி 0.40% பங்குகளை வைத்துள்ளார். அவரது மனைவியும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுதா முர்த்தி 0.92% பங்குகளையும், மகன் ரோகன் முர்த்தி 1.62% பங்குகளையும் வைத்துள்ளனர்.
இதை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்-ன் மனைவியும், நாராயண முர்த்தி மகளுமான அக்ஷதா முர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தில் 1.04% பங்குகளை வைத்துள்ளார். மேலும், நாராயண முர்த்தி பேரன் எகாகிரஹ் ரோகன் முர்த்தி 0.04% பங்குகளை வைத்துள்ளார். இப்படி நாராயண முர்த்தி-யின் குடும்பம் மொத்தமாக 4.02 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை சந்தை வீழ்ச்சிக்கு முன்னர், நாராயண முர்த்தி குடும்பத்தின் இன்ஃபோசிஸ் பங்குகளின் மதிப்பு ரூ.32,236 கோடியாக இருந்தது. ஆனால் பங்கு விலை 6 சதவீதம் வரையில் சரிவடைந்ததால், அவர்களது பங்குகளின் மதிப்பு ரூ.30,334 கோடியாக குறைந்துள்ளது. இதன் காரணமாக அவர்களின் மொத்த சொத்து மதிப்பில் 1900 கோடி ரூபாய் சரிவு ஏற்பட்டுள்ளது.
இன்போசிஸ் நிறுவனம் கடந்த ஆண்டின் இதே டிசம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் நிகர லாபம் டிசம்பர் 2024 காலாண்டில் 11% அதிகரித்து ரூ.6,806 கோடியாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், அப்ரேட்டிங் வருவாய் 8% அதிகரித்து ரூ.41,764 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும் நிலையான நாணய மதிப்பில் இன்போசிஸ் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டின் வருவாய் 6.1% உயர்ந்து சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. காலாண்டு அடிப்படையில் 1.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் டிசம்பர் காலகட்டத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் அப்ரேட்டிங் லாபம் 12% அதிகரித்து ரூ.8,912 கோடியாக உயர்ந்துள்ளது, இதன் விளைவாக ஆப்ரேட்டிங் விகிதம் 21.3% ஆக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications