இந்தியாவின் இரு பெரும் ஐடி நிறுவனங்களாக டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் ஆகியவை பார்க்கப்படுகின்றன. டிசிஎஸ் நிறுவனத்தை பொறுத்தவரை ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கை காரணமாக அண்மை காலமாக கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது. அதே வேளையில் இன்போசிஸ் நிறுவனமோ தங்களுடைய நிறுவனத்தில் புதிதாக ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதற்காக பல்வேறு புதிய நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்போசிஸ் நிறுவனம் தங்களுடைய நிறுவனத்தில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து வருகிறது. லேட்ரல் ஹையரிங் மூலம் பணி அனுபவம் வாய்ந்த ஊழியர்களை பணிக்யில் அமர்த்த திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களிடம் அவர்களுக்கு தெரிந்த நபர் சிறந்த திறமையான நபர்களை பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு பரிந்துரை செய்யப்படக்கூடிய நபர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டால் அவர்களைப் பரிந்துரைத்த ஊழியர்களுக்கு கேஷ் ரிவார்டுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இன்போசிஸ் நிறுவனம் தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பி உள்ள மின்னஞ்சலில் லெவல் 3 அடிப்படையிலான வேலைகளுக்கு நீங்கள் பரிந்துரை செய்யக்கூடிய நபர் தேர்வு செய்யப்பட்டால் உங்களுக்கு 10000 ரூபாய் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல லெவல் 4 அடிப்படையிலான வேலைகளுக்கு நீங்கள் பரிந்துரைக்கப்படும் நபர் தேர்வானால் 25,000 ரூபாய் பரிசும், லெவல் 5 அடிப்படையிலான பணிகளுக்கு நீங்கள் பரிந்துரைக்கும் நபர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டால் 35,000 ரூபாய் பரிசாக வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறது. அதேபோல லெவல் 6 அடிப்படையிலான நிலைகளுக்கு நீங்கள் பரிந்துரை செய்யக்கூடிய நபர் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்களுக்கு 50000 ரூபாய் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது .
இன்ஃபோசிஸ் நிறுவனம் தற்போது இன்ஜினியரிங், குவாலிட்டி இன்ஜினியரிங் , டெக்னாலஜி இண்டர்க்ரேசன் அண்ட் சர்வீஸ் ஆகிய பிரிவில் அனுபவம் வாய்ந்த ஊழியர்களை பணிக்கு தேர்வு செய்து அமர்த்தி வருகிறது. இரண்டு ஆண்டுகள் தொடங்கி 15 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்ட ஊழியர்களை இந்த வேலைகளுக்கு பணியில் அமர்த்துகிறார்கள்.
இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர்கள் நிறுவனம் திறன் மிகு ஊழியர்களை பணிக்கு அமர்த்துவவதில் ஆர்வமாக இருக்கிறது இதற்காக எங்களுக்கு அடுத்தடுத்த பல்வேறு மின்னஞ்சல்களை அனுப்பி வருகிறது என கூறுகின்றனர். இன்ஃபோசிஸ் நிறுவனம் டெல்லி, புனே, சென்னை , பெங்களூர் ,ஹைதராபாத் ,கொல்கத்தா ,திருவனந்தபுரம் ,மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் தங்களுடைய அலுவலகங்களில் இந்த புதிய ஊழியர்களை பணிக்கு அமர்த்த உள்ளது.
டேட்டா அனலிஸ்ட், டேட்டா சயின்டிஸ்ட் , சொல்யூஷன் டிசைனர், ப்ளாக் செயின் டெவெலப்பர்கள், ஜாவா டெவலப்பர்கள் நெட்வொர்க் டிசைனர்கள், ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்கள் , டெக்னாலஜி ஆர்க்கிடெக்ட் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்கிறது. பிஇ, எம்இ, எம்.எஸ்.சி ஆகிய படிப்பை முடித்தவர்கள் இவற்றிற்கு விண்ணப்பம் செய்யலாம் . கடந்த ஆறு மாதங்களில் இவர்கள் இதற்கு முன்பு இன்போசிஸ் நிறுவன நேர்காணல்களில் பங்கேற்றவராக இருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications