ரஃபேல் நடால்-ஐ வளைத்து போட்ட இன்போசிஸ்..!

டென்னிஸ் ஜாம்பவான் மற்றும் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ரஃபேல் நடால் நாட்டின் 2வத பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ்-ன் பிராண்ட் அம்பாசிட்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

இதுக்குறித்து ரஃபேல் நடால் தனது டிவிட்டரில் அனைவருக்கும் வணக்கம். இன்போசிஸ் குழுமத்தின் உலகளாவிய பிராண்ட் அம்பாசிட்டராக சேர்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இன்போசிஸ் அதன் டிஜிட்டல் நிபுணத்துவத்தை உலகளாவிய டென்னிஸ் சுற்றுச்சூழலுக்கும், மைதானத்திற்கு வெளியில் உள்ள சமூகங்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஃபேல் நடால்-ஐ வளைத்து போட்ட இன்போசிஸ்..!

அடுத்த 3 வருடத்திற்கு இன்போசிஸ் உடன் பல முக்கிய தருணங்களில் பயணிக்க உள்ளேன், எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது என டிவிட்டரில் தெரிவித்த ரஃபேல் நடால் #RafaXInfosys #NavigateYourNext #ChampionsEvolve என பல்வேறு ஹேஷ்டேக்-களை தனது பதிவில் சேர்த்துள்ளார்.

டென்னிஸில் குறிப்பாக க்ளே மைதானத்தில் விளையாடும் போட்டிகளில் ரஃபேல் நடால்-ஐ அடிக்க யாரும் இல்லை, டென்னிஸ் விளையாட்டின் கிங் மேக்கராக இருக்கிறார் ரஃபேல் நடால். இந்தியாவிலும் ரஃபேல் நடால்-க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

ATP Tour, Roland-Garros, Australian Open, The International Tennis Hall of Fame ஆகிய போட்டிகளின் இன்னோவேஷன் பார்ட்னராக இன்போசிஸ் இருந்துள்ளது. டென்னிஸ் விளையாட்டை செயற்கை நுண்ணறிவு, கிளவுட், டேட்டா அனலிட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் அனுபவம் என பலவற்றியில் இன்போசிஸ் பணியாற்றி டென்னிஸ் எகோசிஸ்டம்-ஐ பெரிய அளவில் மேம்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பெங்களூர்-ஐ தலைமையிடமாக கொண்டு செயல்படும் பைஜூஸ் நிறுவனம் தனது பிராண்ட் அம்பாசிட்டராக புட்பால் வீரர் லியோனல் மெஸ்ஸி-ஐ நியமித்தது. இந்த நிலையில் தற்போது இன்போசிஸ் ரஃபேல் நடால்-ஐ வளைத்து போட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+