ராணுவ வீரர்களுக்கு கதவை திறந்த இன்போசிஸ்.. முதல் முயற்சி வெற்றி..!

வெளிநாட்டு நிறுவனங்களின் ராணுவ அதிகாரிகளுக்கு என வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு உள்ளது. அதிலும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் ராணுவ அதிகாரிகளை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் அனைத்தும் கட்டாயம் பணியில் சேர்க்க வேண்டும் என கொள்கைகளை கடைப்பிடிக்கிறது.

இந்தியாவில் இதுப்போன்ற கட்டுப்பாடுகள் விதிமுறைகள் இல்லாவிட்டாலும், நாட்டின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் ராணுவ வீரர்களை நிறுவன பணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளது என உள்நிறுவன தகவல் பரிமாற்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இன்போசிஸ் தனது ஊழியர்கள் பட்டாளத்தில் பலதரப்பட்ட பணியாளர்களைக் கொண்டு இயங்கும் நிறுவனமாக மாற உள்ளது.

இன்போசிஸ்

இன்போசிஸ்

இன்போசிஸ் இந்தியாவில் டெலிவரி அலுவலகங்களில் எக்ஸ் - ராணுவ வீரர்களின் முதல் பேட்ச் பணியாளர்களை பணியமர்த்தும் சோதனை திட்டத்தில் பாசிடீவ் ஆன ரெஸ்பான்ஸ்-ஐ கண்டுள்ளதாக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 இரண்டாவது பேட்ச் ஊழியர்கள்

இரண்டாவது பேட்ச் ஊழியர்கள்

இதை தொடர்ந்து இப்போது இந்தியாவில் உள்ள பிற அலுவலகங்களில் ராணுவ வீரர்களின் இரண்டாவது பேட்ச் ஊழியர்களை பணியில் அமர்த்த திட்டத்தில் பணியாற்றி வருவதாக இன்போசிஸ் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

 ஊழியர் குழு

ஊழியர் குழு

இன்போசிஸ் நிறுவனம் ராணுவ அதிகாரிகள் அதாவது ராணுவத்தில் வெளியேறியவர்களை பணியில் அமைப்பதற்காக ஒரு ஊழியர் குழுவை அமைத்துள்ளது. இந்த கட்டமைப்பு மூலம் இப்போது தனது இலக்கை அடைய உதவுவதில் இக்குழு முக்கிய பங்கு வகிக்கும். இதே திட்டம் ஏற்கனவே Infosys அமெரிக்க வர்த்தகத்தில் செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் மாதம்

ஏப்ரல் மாதம்

எத்தனை பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் மற்றும் இந்த திட்டத்தின் மூலம் பணியமர்த்தப்படுவார்கள் என்பது பற்றிய கூடுதல் விவரங்களை இன்போசிஸ் இதுவரையில் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ஏப்ரல் மாதத்தில் அதன் முடிவுகளை வெளியிட உள்ளதாகவும் தெரிகிறது, இது மார்ச் காலாண்டு முடிவில் அறிவிக்க வாய்ப்புகள் அதிகம்.

அமெரிக்கா

அமெரிக்கா

பாதுகாப்பு வீரர்களை பணியமர்த்துவது அமெரிக்காவில் இயல்பான நடைமுறையாகும், ஏனெனில் நிறுவனங்கள் ராணுவ அதிகாரிகள் பயணியாற்றுவதன் மூலம் ஒழுக்கத்தை சக ஊழியர்கள் மத்தியில் கொண்டு வருகின்றன.

அமேசான் இந்தியா

அமேசான் இந்தியா

2019 ஆம் ஆண்டில், அமேசான் இந்தியா Military Talent Pool என்ற ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம், ராணுவப் பணியாளர்கள் அல்லது ராணுவத்தில் பணியாற்றுபவர்களின் துணைவர் நிறுவனத்தில் தொழில்நுட்ப வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் சுமார் 25,000 வீரர்களை பணியமர்த்த திட்டமிட்டிருந்தது.

 வெல்ஸ் பார்கோ

வெல்ஸ் பார்கோ

வெல்ஸ் பார்கோ-வின் இந்தியப் பிரிவும் 2019 இல் இந்த முயற்சியைத் தொடங்கியது. இது முன்னாள் ராணுவ வீரர்களை மட்டும் பணியமர்த்தியது மட்டுமல்லாமல், வெல்ஸ் பார்கோ பணிபுரிய விடுப்பு எடுத்த தீவிர ராணுவ வீரர்களையும் பணியமர்த்தியது.

கோல்ட்மேன் சாச்ஸ்

கோல்ட்மேன் சாச்ஸ்

அமேசான் இந்தியா மற்றும் வெல்ஸ் பார்கோவிற்கு முன்பே, கோல்ட்மேன் சாச்ஸ் அத்தகைய ஒரு திட்டத்தின் பெங்களூரு அலுவலகத்தில் தொடங்கியது. அவர்களுக்கு இன்டர்ன்ஷிப்களை வழங்குகிறது, பலர் முழுநேர ஊழியர்களாக இருக்கிறார்கள். அப்போ இன்போசிஸ் தான் தாமதமா..?

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+