இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் இன்ஃபோசிஸ், கர்நாடகாவின் ஹூப்ளி-யில் உள்ள தனது டெவலப்மென்ட் சென்டரை வலுப்படுத்தும் வகையில், அங்கு பணிபுரிவதற்கு ஊழியர்களை ஊக்குவிக்க பெரும் பணத்தை வெகுமதியாகக் கொடுத்து இடமாற்றம் செய்யும் கொள்கையை அறிவித்துள்ளது.
இந்தியாவில் அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் தனது செலவுகளைக் குறைக்கவும், நாட்டின் அனைத்து பகுதிகளில் இருக்கும் திறன் வாய்ந்த ஊழியர்களைப் பயன்படுத்தும் வகையில் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் அலுவலகத்தைத் திறந்து வருகிறது.

இந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் மேற்கு பகுதியில், கோவா-வுக்கு அருகில் இருக்கும் ஹூப்ளி-யில் புதிதாக டெவலப்மென்ட் சென்டரை திறந்தது. இங்கு ஊழியர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் நாட்டில் இருக்கும் அனைத்தும் ஊழியர்களுக்கு பெரும் நிதி வெகுமதி உடன் இங்கு இடம்பெயரும் வாய்ப்பை வழங்கியுள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் இத்திட்டம் இந்தியாவில் இருக்கும் பேண்ட் 2 மற்றும் அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும். உதாரணமாகப் பெங்களூரில் பேன்ட் 3 பிரிவில் பணியாற்றும் ஊழியர் ஹூப்ளி டெவலப்மென்ட் சென்டருக்கு சென்றால் 2 வருடத்திற்கு 125000 ரூபாயை நிதி வெகுமதியாக அளிக்கிறது.
இந்த தொகை ஒவ்வொரு பதவிக்கும் (பேன்ட்-க்கும்) மாறுபடுகிறது. அதாவது பேன்ட் 4 ஊழியர்களுக்கு 2500000 ரூபாயில் துவங்கி பேன்ட் 7 ஊழியர்களுக்கு 8 லட்சம் ரூபாய் வரையில் நிதி வெகுமதி அளிக்கப்படுகிறது. இது சம்பள உயர்வு, வேரியபிள் பே ஆகியவற்றைத் தாண்டி தனிப்பட்ட முறையில் அளிக்கப்படும் தொகையாகும்.
இன்போசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், இந்த கொள்கை குறித்தும் நிதி வெகுமதி குறித்தும் விளக்கமாக அறிவுறுத்தியுள்ளது.
இந்த முயற்சி, மும்பை-கர்நாடக பகுதியைச் சேர்ந்த ஊழியர்களை ஹுப்ளியில் உள்ள வாய்ப்பு கவர்ச்சி கரமானதாக இருக்கும். மேலும், இந்தக் கொள்கை, ஊழியர்கள் தங்களின் தற்போதைய பணிகளை ஹுப்ளியில் இருந்து தொடர்ந்து பணியாற்றலாம்.
இந்த நடவடிக்கையைக் கர்நாடக வர்த்தக மற்றும் தொழில்துறை, உட்கட்டமைப்புத்துறை அமைச்சர் எம்.பி. பட்டில் பாராட்டியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், "ஹுப்ளி வளர்ச்சிக்காகத் தயார்: இன்ஃபோசிஸ் ஊக்கத்தொகைகளுடன் உள்ளூர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஹுப்ளி வளாகத்திற்கு இடமாறும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகைகளை வழங்கிய இன்ஃபோசிஸை நான் பாராட்டுகிறேன் என டிவீட் செய்துள்ளது.
இதே இன்போசிஸ் கோயம்புத்தூரில் தனது அலுவலகத்தை விரிவாக்கம் செய்யும் போது இந்நிறுவன ஊழியர்கள் நான் நீ என போட்டிப்போட்டுக்கொண்டு இடமாறினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications