உலக அளவில் ஐடி துறை பல மாற்றங்களை கண்டு வருகிறது. ஏஐ தொழில்நுட்பத்தின் வருகையே இதற்கு முக்கிய காரணமாகும். கோடிங் உள்ளிட்ட பல வேலைகளையும் ஏஐ தொழில்நுட்பமே செய்கிறது. எனவே ஐடி நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து வேலைகளை செய்து வருகின்றன. அதற்கு ஏற்ற வகையில் ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதையும் மாற்றி இருக்கின்றன.
ஐடி வேலைகள்: ஐடி துறை மந்தநிலையில் இருப்பதாக சொல்லப்பட்டாலும் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தையும் வருவாயையும் ஈட்டியுள்ளன. இந்த நிலையில் இந்த நிறுவனங்கள் 2026ஆம் நிதியாண்டில் கணிசமான அளவு ஊழியர்களை பணிக்கு அமர்த்தவும் முடிவு செய்து இருக்கின்றன.

இன்போசிஸ்: இந்தியாவின் முன்னணி இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்போசிஸ் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 210 பேரை புதிதாக வேலைக்கு அமர்த்தியிருக்கிறது, இதன் மூலம் இன்போசிஸ் ஊழியர்களின் எண்ணிக்கை 3,23,788 என உயர்வு கண்டிருக்கிறது. 2026 ஆம் நிதி ஆண்டில் இன்போசிஸ் நிறுவனம் புதிதாக 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க திட்டமிட்டு இருக்கிறது. குறிப்பாக பிரஷர் நிலையில் புதிதாக 20000 பேரை பணியில் அமர்த்தும் திட்டம் இருப்பதாக இன்போசிஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

டிசிஎஸ்: கடந்த ஆண்டு 15 ஆயிரம் பேரை வேலைக்கு அமர்த்திய நிலையில் இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இருப்பதாக இன்போசிஸ் தெரிவித்திருக்கிறது. அதேபோல இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் இந்த ஆண்டு 42,000 பேரை புதிதாக வேலைக்கு அமர்த்த இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பணியில் சேர்ப்போம் என டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
கடந்த காலாண்டை விட குறைவு: டிசிஎஸ் நிறுவனம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் புதிதாக 5090 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருக்கிறது . கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்தியாவை சேர்ந்த 6 முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, டெக் மகேந்திரா, ஹெச்சிஎல், எல்டிஐ மைண்டு ட்ரீ ஆகிய நிறுவனங்கள் புதிதாக 13 ,935 பேருக்கு வேலை வாய்ப்பு அளித்திருந்தன . ஆனால் இந்த காலாண்டில் அது 72% குறைந்திருக்கிறது என எக்னாமிக் டைம்ஸ் செய்தி கூறுகிறது.
4 நிறுவனங்களில் ஊழியர்கள் குறைப்பு: டிசிஎஸ், இன்போசிஸ் புதிதாக ஆட்களை தேர்வு செய்துள்ள நிலையில் ஹெச்சிஎல் டெக் ,விப்ரோ, டெக் மகேந்திரா , எல்டிஐ மைண்ட் ட்ரீ நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையில் 1423 பேர் குறைந்துள்ளனர். ஐடி துறையில் ஏஐ பயன்பாடு அதிகரித்து வருவதன் காரணமாக நிறுவனங்கள் ஊழியர்கள் எண்ணிக்கை குறைத்துவிட்டு ஏஐ மூலம் குறிப்பிட்ட சில பணிகளை மேற்கொள்கின்றன. இது நிறுவனங்கள் புதிதாக ஊழியர்களை தேர்ந்தெடுக்கும் முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது .புதிதாக வேலை தேடுபவர்கள் ஏஐ சம்பந்தப்பட்ட தங்களுடைய திறன்களை வளர்த்துக் கொள்வது வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு வாய்ப்பை அதிகப்படுத்தும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications