இன்ஃபோசிஸ் தலைவர் திடீர் ராஜினாமா.. நிறுவனத்திற்கு பெரும் இழப்பா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த ரவிக்குமார் என்பவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

அவர் எதற்காக ராஜினாமா செய்தார் என்ற காரணத்தை தெரிவிக்கவில்லை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்போசிஸ் தலைவர் ரவிகுமாரின் ராஜினாமா அந்நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இன்ஃபோசிஸ் மீது வழக்கு போட்ட முன்னாள் உயர் அதிகாரி.. என்ன நடந்தது?

இன்ஃபோசிஸ் தலைவர்

இன்ஃபோசிஸ் தலைவர்

கடந்த 2002ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த ரவிக்குமார் அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவிகரமாக இருந்தது. சுமார் 20 ஆண்டுகள் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ரவிக்குமார் பல்வேறு பதவிகளில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னென்ன பதவிகள்?

என்னென்ன பதவிகள்?

இன்ஃபோசிஸ் தலைவராக இருந்த ரவிகுமார் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சர்வதேச அளவில் உள்ள அனைத்து சேவைகள், டிஜிட்டல் மாற்றம்,தொழில் வளர்ச்சி, பாரம்பரிய தொழில்நுட்பம், பொறியியல், தரவு மற்றும் பகுப்பாய்வு, கிளவுட் மற்றும் இன்ஃப்ரா, காப்பீடு, உடல்நலம், பணம் செலுத்தும் பணிகளுக்கான உலகளாவிய தலைவர் ஆகிய பதவிகளில் இன்ஃபாசிஸ் நிறுவனத்தில் பணியாற்றினார்.

துணை சி.இ.ஓ
 

துணை சி.இ.ஓ

கடந்த 2017 ஆம் ஆண்டு ரவிகுமார் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை சிஇஓவாக நியமனம் செய்யப்பட்ட பிறகு அந்நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சி கண்டது என்பது குறிப்பிடப்பட்டது. இந்தநிலையில் இன்ஃபோசிஸ் தலைவராக இருந்த ரவிக்குமார் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பு என அந்நிறுவனத்தின் இயக்குனர் குழு தெரிவித்துள்ளது.

என்ன திட்டம்

என்ன திட்டம்

தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் ரவிக்குமார் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இன்போசிஸ் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு முடிவு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில் திடீரென ரவிக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 பங்குச்சந்தை

பங்குச்சந்தை

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார் ராஜினாமா செய்ததன் காரணமாக அந்நிறுவனத்தின் பங்கின் விலை என்ன ஆகும் என்பது இன்றைய பங்குச்சந்தை தொடக்கத்தில் தெரியவரும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys President Ravi Kumar S. resigns after two decades of association

Infosys President Ravi Kumar S has announced he resigned his post with effective October 11, as per a regulatory filing made by the company on Tuesday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X