பெங்களூரு: இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் இன்போசிஸ், 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.6,368 கோடி நிகர லாபம் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டை ஒப்பிடுகையில் 7.1% அதிகம் ஆகும்.
கடந்த காலாண்டில் (ஜனவரி-மார்ச்) ரூ.7,975 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்த இந்நிறுவனம், ஜூன் காலாண்டில் 20.1% வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இருப்பினும், ஜூன் காலாண்டில் இன்போசிஸ் வருவாய் ரூ.39,315 கோடியுடன் வருடாந்திர அடிப்படையில் 3.6% வளர்ச்சியும், காலாண்டு அடிப்படையில் 3.7 சதவீதமும் உயர்ந்துள்ளது.

இந்நிறுவனத்தின் செயல்பாட்டு லாப விகிதம் நடப்பு நிதியாண்டில் 20-22% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நிலையான நாணய மதிப்பீட்டில் 2024-25 நிதியாண்டில் வருவாய் 3-4% வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி சலில் பரேக், "நிதியாண்டின் தொடக்கமே சிறப்பாக அமைந்துள்ளது. வலுவான வளர்ச்சி, செயல்பாட்டு லாப விரிவாக்கம், பெரிய ஒப்பந்தங்கள் மற்றும் அதிகபட்ச பணப்புழக்கம் ஆகியவை இதற்குக் காரணம்" எனத் தெரிவித்தார்.
இன்போசிஸ் காலாண்டில் துறைவாரியான வளர்ச்சியைப் பார்க்கும் போது, நிதி சேவைகள் துறை 27.5 சதவீதமும், ரீடைல் துறை 13.8 சதவீதமும், கம்யூனிகேஷன் துறை 12.1 சதவீதமும், எனர்ஜி, யுட்டிலிட்டி, ரெசோர்ஸ் மற்றும் சேவைகள் துறை 13.3 சதவீதமும், உற்பத்தித் துறை 14.7 சதவீதமும், உயர் தொழில்நுட்ப துறை 8 சதவீதமும், லைப்சைன்ஸ் துறை 7.3 சதவீதமும் இக்காலாண்டில் வளர்ச்சி அடைந்துள்ளது.
சந்தை கணிப்புகளைத் தாண்டி இன்போசிஸ் சிறப்பான லாபத்தைப் பதிவு செய்துள்ளது. ஆனால் சக போட்டி நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் ஹெச்சிஎல் லாபத்தில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சந்தை கணிப்புகளைத் தாண்டி ரூ.12,040 கோடி அளவிலான லாபத்தைப் பதிவு செய்து 9% வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதேபோல் HCL டெக்னாலஜிஸ் 2024 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.4,257 கோடி அளவிலான லாபத்தைப் பெற்ற நிகர லாபம் 20% அதிகரித்துள்ளது.
இவ்விரு நிறுவனங்களை ஒப்பிடும் போது இன்போசிஸ் நிகர லாபம் ரூ.6,368 கோடி பதிவு செய்து 7.1% அளவிலான வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளது.
இன்போசிஸ் பங்கு விலை இன்றைய வர்த்தகத்தில் 2 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கு விலை 1,764.95 ரூபாய் என்ற 52 வார உச்சத்தைத் தொட்டு முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
More From GoodReturns

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

ஜெமினி, கிளாட்-க்கு வேட்டு..!! OpenAI நிறுவனத்தில் உருவாகிய புதிய பதவி..! இனி இதற்கு தான் எதிர்காலம்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!



Click it and Unblock the Notifications