இந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் கொரோனா தாக்கத்தால் பல்வேறு வர்த்தகப் பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. கொரோனா தாக்கம் இன்போசிஸ் வாடிக்கையாளர்களைக் கடுமையாகப் பாதித்துள்ள நிலையில் இந்நிறுவனத்திற்குக் கிடைக்கவேண்டிய பிராஜெக்ட்கள் அதிகளவில் ரத்தாகியுள்ளது.
இதனால் இனிவரும் காலத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி மந்தமாகி, வருவாய் அளவில் தொய்வும், லாபத்தில் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும் என இன்போசிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேவேளையில் இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓ சலில் பாரிக்-ன் சம்பளம் 27 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது, இன்போசிஸ் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர் இழப்பு
கொரோனா-வால் ஏற்பட்ட வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பாதிப்பு அடுத்த சில காலாண்டுகளுக்கு மீண்டு வருவதாகத் தெரியவில்லை. இதனால் இன்போசிஸ் நிறுவனத்தின் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் பிற முக்கிய வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்று இன்போசிஸ் நிறுவனத்திற்குக் கொடுத்த திட்டங்களை ரத்து செய்துள்ளனர்.
இதனால் இந்நிறுவனத்தின் லாப அளவீடுகள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
வளர்ச்சி விகிதம்
முதல் முறையாக இன்போசிஸ் தனது வளர்ச்சி விகிதத்தைத் திரும்பப் பெற்றுள்ளது. இந்த வர்த்தகப் பிரச்சனையால் இன்போசிஸ் நிறுவனம் பல்வேறு சேவைகளையும் ரத்து செய்துள்ளது, மேலும் தனது வாடிக்கையாளர்கள் கொரோனா பாதிப்பால் பிராஜெட்-ஐ தாமதம் செய்தும், தற்காலிகமாக நிறுத்தியும், ரத்து செய்தும், வர்த்தகம் குறைவாக இருப்பதால் பல்வேறு சேவைகளைக் குறைத்த காரணத்தால் இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப அளவீடுகள் திட்டமிட்டபடி இருக்காது எனப் பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது இன்போசிஸ்.
சலில் பாரிக்
மார்ச் மாதத்துடன் முடிந்த 2019-20ஆம் நிதியாண்டுக்கான இன்போசிஸ் சீஇஓ சிலில் பாரிக் சம்பளம் 27 சதவீதம் வரையில் உயர்ந்து 6.15 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இவருக்கான செயல்திறன் (Performance) அடிப்படையிலான வறையரைப்பட் பங்குகள் கடந்த ஆண்டை விடவும் 50 சதவீதம் அதிகமாகக் கொடுத்துள்ளது இன்போசிஸ் நிர்வாகம். ஆனால் இவரது நிரந்த சம்பளத்தில் கணிசமான அளவு குறைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரவின் ராவ்
இதேபோல் இன்போசிஸ் தலைமை செயல் அதிகாரியான பிரிவின் ராவ்-இன் சம்பளம் 2019-20ஆம் நிதியாண்டில் 29 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஊழியர்கள்
கொரோனா பாதிப்பின் காரணமாக ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு, போனஸ், பதவி உயர்வு ஆகியவை கொடுக்க முடியாது என இன்போசிஸ் ஏப்ரல் மாதம் தெரிவித்த நிலையில், தற்போது சிஇஓ, சிஓஓ-க்களுக்கு அளிக்கக் கொடுத்துள்ளது ஊழியர்கள் மத்தியில் கோபத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications